வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா..?
எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இதன்படி எதிர்வரும் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என அறிந்து கொள்ளலாம் என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகிறது.
இதற்காக அரசாங்க தகவல் மையத்தை தொலைபேசி இலக்கம் 1919 மூலம் வினவி தமக்கு உரிய மாவட்டத்தையும் தமது தேசிய அடையாள அட்டை எண்ணையும் தமது முழுப் பெயரையும் அறிவித்து தமது வாக்குரிமை வழங்கும் பகுதியின் பெயரையும் மாவட்ட எண்ணையும் வாக்காளர் பட்டியலிலு ள்ள தமது வரிசை எண்ணையும், அல்லது 'சீரியல் எண்ணை' அறிந்துகொள்ளலாம்.
If anyone knows the webpage for online checking please let me know.
ReplyDelete