முஸ்லிம் கவுன்சில் கண்டனம்
பௌத்த மதத்தினதும் உலகிலுள்ள பௌத்தர்களது உன்னத வழிபாட்டுத் தலமான புத்தகய வழிபாட்டுத் தலம் தாக்கப்பட்டதனை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா கண்டிக்கின்றது.
புத்தகய தாக்கப்பட்டது குறித்து முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புத்தகயவும் அதன் அண்மித்த பகுதிகளும் தாக்கப்பட்ட நிகழ்வு குறித்து இலங்கை முஸ்லிம்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். பொறுப்பற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயலே இதுவாகும். புனித சின்னத்துக்கு பாரிய பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாதவாறு குறித்து எமக்கு நிம்மதியை அளிவிப்பதாகவுள்ளது. காயத்துக்குள்ளானவர்கள் விரைவில் குணமடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.
பயங்கரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதனை அங்கிகரிக்க முடியாது. வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கொடூரமான குற்றச் செயலாகும். நியாயமான எவராலும் அதனை அங்கீகரிக்க முடியாது.
பௌத்தர்கள் புனித மகா போதியை பௌத்த தர்மத்தின் ஊற்றாகவே கருதுகின்றார்கள். இந்த கோழைத்தனமான குற்றச் செயலை புரிந்தவர்களை உடன் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்க உட்ன் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முஸ்லிம்கள் பிராந்தியத்தின் அரசாங்கங்களையும் உலகத் தலைவர்களையும் வேண்டுகின்றது
Unkalukku Sri Lanka muslim problem theriyathu
ReplyDelete===============Kalmunai Mohamed Fowse+++++++++++++