Header Ads



அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்..!

(UMAR ALI MOHAMED ISMAIL)

                     புலி வருது புலி வருது என்று சொல்லி புலி வந்தே விட்டது, ஆம் அதுதான் வட மாகாண சபைத்தேர்தல்,வடமாகாணத்தில் தேர்தலென்றவுடன் பலரிடம் இருந்தும் பலவாறான கருத்துக்களும் , விமர்சனங்களும்  வெளிப்பட்டன. சிலர் கடந்தகால  நிகழ்வுகளை மீட்டுப்பார்த்து அவற்றினூடாக எழுந்த கசப்பான எண்ணங்களை பகிர்ந்திருந்தனர்,இன்னும் சிலர் நிகழ்கால அரசியல்வாதிகளின் போக்கினால் இலங்கை முஸ்லீம்களின் எதிர்காலம்  ஒரு பாலவனமாகிபாய் விட்டதென்று கூறினர். இன்னும்சிலர் வடக்கு மக்கள் இன்றைய அரசியலாதிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்கள்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க மற்றுமொரு சாரார், இந்த வடமாகான சபைத்தேர்தலில் முஸ்லீம்கள் எவ்வாறு ஒற்றுமைப்பட்டு குதிக்கவேண்டும் என்றும் அதன் முக்கியத்தையும் வலியுறுத்தியிருந்தனர்,அந்த வகையில் நானும் jaffna musleem இணையத்தளத்தில்  கடந்த 27/04/2013 அன்று "முஸ்லீம்கட்சிகள்  வடமாகாணத்தில் ஒருகுடையின் கீழ் ஒன்றுபட்டு ஒருசின்னத்தின் கீழ் மட்டுமே தேர்தலில் குதிக்க வேண்டும்!"என்ற தலைப்பில் ஒருஆக்கத்தை எழுதியிருந்தேன்.

                      ஆனால் நடந்தது என்ன ?அனைவரது வேண்டுதல்களும் நிராகரிக்கப்பட்டு  எல்லோரும் முடிவுகளை எடுத்து விட்டனர். ரிசாத் பதியுதீனும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பேசப்போகின்றார்கள் என்றார்கள், நாளை என்றனர்நாளை மறுநாள் என்றனர் ,இறுதியில் சந்திப்பு நடைபெறாதென்றனர். அத்துடன்  அது காவின் மண்டபத்தில் கலைந்துவிட்ட கல்யாணமாக முடிந்துவிட்டது.

                      முஸ்லீம் காங்கிரசை ஏறெடுத்தும் பார்க்காத மகிந்த ராஜபக்சவின் அரசினை விட்டுவிட்டு ரிசாத்  ஒருபோதும் தனியாக கேட்க மாட்டார், அப்படிக்கேட்பது அவருக்கு கணிசமான தோல்வியை ஏற்படுத்தும் அதேவேளை தம்மை சட்டை செய்யாத அரசுடன்  SLMC  உடன்பாடாக செல்வதற்கு SLMC இன் உயர்பீடம் ஒருபோதும் சம்மதிக்காது.முஸ்லீம் மக்களும் கிழக்கு மாகாண  சபை தேர்தல் துவங்கியதிலிருந்து அரசுடன் SLMC இணைந்து கேட்கக்கூடாது என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

                                            இதற்கிடையில் ஏற்கனவே வடமாகாணத்தில் நடைபெற்ற  உள்ளூராட்சித்தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் இரண்டாகி வேறுபட்டு நின்றதால் முஸ்லீம்களின் வாக்குகள் சின்னாபின்னமாக்கப்பட்டு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் நழுவ விடப்பட்டன என்பதும் நாம் நன்கறிந்த விடயமே!

இது இவ்வாறிருக்க கடந்தகாலத்தில் அரசியல் முகவர்களின் கடுப்பேற்றும் நடைமுறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எக்குத்தப்பாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களாயின் அது அது அவர்களது தலையில் அவர்களே மண்  அள்ளிப்போடுவதுபோலவே இருக்கும். அவ்வாறு மக்கள் மாற்றுத் தெருவுகளை தேர்ந்தேடுப்பார்களாயின் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு  தமக்கிடையே உடன்பாட்டுக்கு வராத ஹக்கீமும் ரிசாத்துமே அதற்க்கு பதில் கூற வேண்டியவர்களாவார்கள்.

2000ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில்  தமிழ்கட்சிகளின்  பிரதிநிதித்துவம் எப்படி இல்லாமல் போனது ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் ,அகில இலங்கை தமிழ் காங்கிரசும்  பிரித்தெடுத்த தமிழர்களின் வாக்குகள்  தமிழர் விடுதலைக்கூட்டனிக்கு கிடைத்திருந்தால் அன்று அவர்களது பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக இந்த இழப்புக்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்ததாலும் அங்கத்தவரை இழந்த தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை இனிவரும் காலங்களில் இல்லாமல் செய்யும் நோக்குடனேயே  தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவானது.தமிழர்கள் ஒருவரை ஒருவர் அரசியல் கொள்கைகளுக்காக சுட்டுக்கொன்றவர்கள் அவர்கள் பாராட்டாத பகைமையை என் கலிமாச்சொன்ன முஸ்லீம்களாகிய நாங்கள் நமக்கிடையே பாராட்ட வேண்டும்?

             வடமாகாண முஸ்லீம்களின் முகவரிகளை ஓடும் நீரில் எழுதி விட்டீர்களே நிச்சயமாக இதன் பலனை  அந்த சமுதாயம் அனுபவிக்கும்போது இந்த போலி முகங்கள் தமது வாய்ச்சவடால்களால் வெற்றுவேட்டுக்களை மட்டுமே தீர்ப்பார்கள். முஸ்லீம்  கட்சிகள் இது வரை பிரிந்ததனால் சாதித்ததை விட இழந்தவைகளே அதிகம். இவற்றை என் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை ?கொழும்பிலே வீடு? பராடோ ஜீப்  கை நிறையக்காசு இன்னும் சொகுசுகள் இடங்களைப்பொறுத்து அதிகரித்துக்கொண்டே போகும்.ஆனால் இங்கே வருந்துபவர்கள் மேற்சொன்ன வசதிகளையெல்லாம் திரைப்படத்தில்தான்  கண்டுகளிக்கமுடியும்.

முஸ்லீம் கட்சித்தலைவர்களது கடுமையான சுயளாவாதமும்,வரட்டுக்கௌரவமுமே  நமது  இன்றைய  இழுபறிநிலைக்கு காரணமாகும்.

2 comments:

  1. This is not enough for our foolish leaders!

    ReplyDelete
  2. கட்டுரையாளரைப் போன்று கருத்துடன் அறிவுரை வழங்கிய அத்தனை பேரையும் புறந்தள்ளிவிட்டு, முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போட்டு விட்டு தத்தமது பதவிக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும் தனித்தனியாகப் போட்டியிடுகின்ற இந்தத் தலைமைகளுக்கு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள்தான் இனி பதிலளித்துப் பாடம் புகட்ட வேண்டும்.

    அப்படியொரு பாடம் படித்தால்தான் இனிவரும் காலங்களிலாவது சமூகத்தின் எதிர்பார்ப்பு பற்றியும், ஒற்றுமை பற்றியும் இவர்கள் கொஞ்சமாயினும் கண்களைத் திறப்பார்கள்!

    'கோடிகளை உழைப்பதற்காக இலட்சங்களை அள்ளியிறைக்கும் இத்தேர்தலில் தீர்ப்பளிக்கும் வாக்காளர்களும் எச்சில் கொடுப்பனவுகளுக்காகச் சோரம் போவார்களா? அல்லது தமது வாழ்வுரிமை இலட்சியங்களுக்காக புத்திபூர்வமாய் வாக்களிப்பார்களா?'

    பொறுத்திருந்த அவதானிக்கலாம்!

    -புவி றஹ்மதழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.