நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் விரிந்த வடிகான்.
(சுலைமான் றாபி)
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 30 மில்லியன் (03 கோடி) ரூபா செலவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் (RDD) மேற்பார்வையுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிந்தவூர் வைத்தியசாலை வீதியே ஆகும். இது அண்மைக்காலங்களில் பாரிய குறையாக தென்பட்ட போதிலும் இவ்வீதி தற்போது அபிவிருத்தி செய்யப்படுவது பாராட்டத்தக விடயமாகும். இருந்த போதும் அபிவிருத்தி செய்யப்படும் வீதியில் மக்களுக்கு தீங்கினை விளைவிக்கும் எதுவாக இருந்தாலும் அது அவர்களால் துவம்சம் செய்யப்பட்டு நன்மதிப்பினை இழக்கும் நிலையினைக்கொண்டிருக்கும். இந்த நிலையில் ஒன்றுதான் இவ்வீதியில் ஒரே சமாந்திரத்தில் இரண்டு வித்தியாசமான வாடிகான்கள் அமைக்கப்பட்டுள்ளமை. இதனால் அன்றாடம் பயணம் செய்யும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இதில் சற்று வேகமாக (மணிக்கு 40 கி.மீ) வருகின்ற போது குறிப்பாக துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்கள் (Ambulance உட்பட) ஆகியவைகள் மூலமாக பிரயாணம் செய்யும் போது பல வகையான விபத்து சம்பவங்கள் கடந்த காலங்களில் நேர்ந்ததனை நன்கு அறிய முடிந்தது. மேலும் இந்த வடிகானின் இருமருங்கிலும் மதிழ்களும், மின்கம்பங்களும் காணப்படுவதனால் விபத்து ஏற்படும் போது உயிரை பறிக்கும் எமனாக சில வேளைகளில் மாறலாம்.
இதேவேளை இந்த விரிந்த வடிகான் அமைக்கப்பட்ட போது சமூக ஆர்வலர்கள் சிலர் இதன் எதிர்கால நிலை பற்றி வீதி அபிவிருத்தி நிர்மாணப்பணியாளர்களின் கவனதிற்கு கொண்டு வந்த போதும் அவைகள் அலட்சியப்படுத்தப்பட்டதாக ஒரு சமூக ஆர்வலர் தெரிவித்தார். மேலும் இந்த விரிந்த வடிகான் அமைப்பின் மூலமாக கடந்த 21.07.2013ம் திகதி பாரிய விபத்து சம்பவமும் இவ்வீதியில் நடந்தேறியுள்ளது. இதேவேளை இந்த விரிந்த வடிகானுக்கு அருகாமையில் சுமார் 30 அல்லது 40 அடிகளுக்கு அப்பால் இன்னுமொரு வடிகான் அமைக்கப்படுள்ளது. எனவே ஒரே வீதியில் ஒரே சமாந்திரத்தில் இரு வெவ்வேறு வாடிகான்கள் அவசியம்தானா?? மேலும் அமைக்கப்பட்டுள்ள விரிந்த வடிகான் மூலமாக எப்படியான நன்மைகள் கிடைக்கப்போகின்றன? என்பது பொது மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
எனவே இவ்வீதியின் மூலமாக பொது மக்களுக்கு ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இவ்விரிந்த வடிகானை வீதியோடு சேர்த்து சமதரையாக்குவதன் மூலம் வீதி விபத்துக்களை குறைத்து மக்களுக்கு சௌகரியமான பிரயாண வசதிகளை வழங்க வழிசமைக்குமல்லவா?
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள, வீதியின் குறைபாடுகள், இந்த வீதியின் நோக்ககத்தையே தவிடுபொடியாக்குவதாக அமைந்துள்ளது. கொந்தராத்துக்காரர்களினதும், வீதியமைப்புடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களதும் “எமக்கு எல்லாம் தெரியும்“ என்ற நிலைப்பாடே இதற்கு காரணமாகும். இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாத பட்சத்தில் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு இடர்கள் ஏற்படும் என்பது உண்மை.
ReplyDelete