Header Ads



வடக்கில் பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாதிருந்த பொழுதே முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர்

கிழக்கு முஸ்லிம்கள் வடக்கோடு இணைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வடக்கோடு இணைவதற்கு ஒருபோதும் ஒத்துப்போகமாட்டார்கள். இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்தார். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்திலே பேசுகையில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றப் பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் இவ்வாறு கூறினார். கல்முனை ‘ஹொலி பீல்ட்’ விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொழுது, அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அஸ்வர் இவ்விதம் கருத்து வெளியிட்டார்.  தொடர்ந்து பேசிய எம்.பி. அஸ்வர், 

வடக்கில் பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாதிருந்த பொழுதே, ஒரு லட்சம் அளவிலான முஸ்லிம்கள் யாழ்ப்பாணத் திலிருந்து ஓர் இரவிலேயே அடித்துத் துரத்தப்பட்டனர்.

பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால், முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் கஷ்டத்துக்குள் உள்ளாவார்கள் என்பதை நாம் இலகுவில் உணர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்துக்கு தொடர்ந்து விஜயம் செய்கின்ற ஒருவன் என்ற முறையிலும், மட்டக்களப்புத் தமிழர்களின் உணர்வுகளை நன்கு அறிந்தவன் என்ன முறையிலும் யாழ்ப்பாண ஆதிபத்தியத்தின் கீழ் மட்டக்களப்பு வருவதை மட்டக்களப்புத் தமிழர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இன்றும் தாண்டவமாடும் தீண்டாமைக் கொள்கையை மட்டக்களப்புத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவே மறுக்கின்றனர்.

மேற்கு மேற்குத்தான் கிழக்கு கிழக்குத் தான்- இரண்டும் ஒன்று சேர முடியாது என ஆங்கிலேயே அறிஞன் மார்க் டுவைன் கூறியது போன்று, இங்கு எமது சூழ்நிலையைப் பொறுத்து வடக்கு வடக்குத்தான், கிழக்கு கிழக்குத் தான் இரண்டும் இணைய முடியாது. இரு மாகாண சபைகளின் கீழ்தான் இவ்விரு மாகாணங்களும் இயங்க வேண்டும். என்ற நிலைப்பாட்டை இந்நாட்டில் பெரும் பான்மை மக்கள் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.