Header Ads



'வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் வீடமைப்புக் கனவை நனவாக்கும் திட்டம்'

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையும் இணைந்து  ரட்டவிரு பியச எனும் வீடமைப்பு வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் மற்றும் சென்றிருக்கும் புலம்பெயர் தொழிலாளலர்களின் வீடமைப்புக்கனவை நனவாக்குமுகமாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கிராமத்திலிருந்து கிராமத்திற்கு எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படத்தப்படவுள்ள இத்திட்டத்தில் பதிவை மேற்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளவர்கள் ரட்டவிரு அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் காணியொன்றின் உரிமையைக் கொண்டுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112886420மற்றும்0112886424 எனும் இலக்கங்களுடாகத்தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடீயும் அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடீயும்.

No comments

Powered by Blogger.