Header Ads



கத்தார் வாழ் நிககொள்ள சகோதரர்களின் ஒன்று கூடல்

(நாகூர் ழரீஃப்)

மாத்தளை மாவட்டத்தில் யட்டவத்த பிரதேச சபை பிரிவில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் கிராமமே நிககொள்ள. இவ்வூரை பிறப்பிடமாகவோ அல்லது வசிப்பிடமாகவோ கொண்ட முஸ்லிம் சகோதரர்களுக்கான விஷேட இஃப்தாரும் ஒன்று கூடலும் எதிர் வரும் 02-08-2013 (வெள்ளிக்கிழமை) மாலை 5:00 மணியளவில் 'முன்தஸா பார்க்' கில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேற்படி இஃப்தார் நிகழ்விலும் சமூக சேவையை மையமாகக் கொண்ட நிகழ்விலும் கத்தார் வாழ் நிககொள்ள சகோதரர்கள் தவறாது கலந்து சிறப்பிக்குமாறும் ஊரை மையமாகக் கொண்ட பணிகளில் தமது முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் இதன் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொள்ளகின்றனர்.

அங்குரார்ப்பன நிகழ்வும், அதன் நடப்பு வருடத்துக்கான நிருவாகத் தெரிவும் இடம் பெறவுள்ளதால் இத்தகவலை கத்தார் வாழ் நிககொள்ள சகோதரர்கள் ஏனைய சகோதர, நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களுக்கு அஷ் ஷைக் எம்.எப்.எம். ஷஹீர் (நளீமி) 30078257 என்ற இலக்கத்துடனோ அல்லது, அஷ் ஷைக் எம்.எப்.எம். பவ்ஸான் (மீஸானி) 66070225 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறும் வினயமாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.