'அஸ்வர் அரசுக்கு ஆலவட்டம் வீசுகின்றார்'
தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆளும் தரப்பு எம்.பி அஸ்வர், பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையானது அருவருக்கத்தக்கதாகும். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே அசௌகரியப்படுத்தும் செயலாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். இதுபற்றி சண். குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவரான, அஸ்வர் எம்.பி ஏனைய சமூகத்தினருக்கு பிழையான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அஸ்வர் எம்.பி 'வெள்ளவத்தையில் தமிழ் பெண்களின் ஒய்யார நடையை' ரசித்துக்கொண்டே இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். வெள்ளவத்தையில் தமிழ் பெண்கள் ஒய்யாரமாக நடப்பதாகக் கூறும் அஸ்வர் எம்பிக்கு தமிழ் பெண்களின் பாதுகாப்பிற்கும், சுதந்திரமான நடமாட்டத்திற்கு உள்ள ஆபத்துக்கள் தெரியவில்லை.
கொழும்பில் தாலிக்கொடிகள், சங்கிலிகள், கொள்ளையடிக்கப்படுகின்றன. இப் பிரதேசங்களில் குறுக்குப் பாதைகளில் தமிழ் பெண்கள் தனியாக நடந்து சென்றால் பணம் பறிக்கப்படுகின்றது. மாணவிகளுக்குக் கூட இதே நிலைதான்.
இந்த யதார்த்தம் இவரது கண்களுக்குத் தெரியவில்லையே. அதிலும் இன்றைய புனித ரமழான் காலத்தில் மூத்த அரசியல்வாதியொருவர் இவ்வாறு தமிழ் சமூகத்தை இழிவுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தந்தையைப் போன்ற ஒருவர் ஒய்யார நடை பற்றிப் பேசுவதா?
இவரது இவ் உரையானது பிழையான முன்னுதாரணமாகும். நாளை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக எவராவது பிரஸ்தாபிக்கும் போது, ஏன் புதுக்கடையில், மாளிகாவத்தையில் முஸ்லிம் பெண்கள் ஒய்யாரமாக நடந்து செல்கின்றனரே, அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று நாம் பதில் அளித்தால் எப்படி இருக்கும் என அஸ்வர் சிந்திக்க வேண்டும்.
ஆனால், நாம் அப்படி தரக்குறைவாக பேச மாட்டோம். அதுமாத்திரம் அல்ல, முஸ்லிம் சகோதரிகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள அபாயா அணியும் பிரச்சினை பற்றி நமது தலைவர் மனோ கணேசன் தான் பேசுகின்றார். இதுபற்றி அஸ்வர் பேசுவது இல்லை. அதுமட்டும் அல்ல, இப்படி ஒரு பிரச்சினையே முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்பது போல் அஸ்வர் அரசுக்கு ஆலவட்டம் வீசுகின்றார்
பாராளுமன்றம் நாட்டின் உயர்பீடம். இங்கு பேசும்போது, பொறுப்புடன் பேச வேண்டும். ஒரு சமூகத்தின் பெண்களை இழிவுபுடுத்திப் பேசும்போது, இன்னொரு நாள் தமது சமூகத்தின் பெண்களுக்கு எதிராகவும் அது 'பூம ரேங்' ஆகத் திரும்பும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் நாம் காணும் சுதந்திரம் மேல் பூச்சாகத்தான் இருகின்றது. தமிழ் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, வரையறைக்கப்பட்ட கலாச்சார சுதந்திரத்துடனேயே வாழ்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். இன்று இந்த கலாச்சார சுதந்திரம் முஸ்லிம் மக்களுக்கும்கூட இல்லை. இந்த கசப்பான உண்மைகளை அடுத்த முறை வாயை திறக்கும் முன்னர் முன்னாள் ஐதேக, இந்நாள் ஆளுந்தரப்பு தேசிய பட்டியல் எம்பி அஸ்வர் உணர்ந்து கொள்ள வேண்டும் என சண். குகவரதன் மேலும் தெரிவித்துள்ளார்.
pls teach islam to aswar mp
ReplyDeleteSuper.....
ReplyDeleteஐயா குகவரகன்.
ReplyDeleteஅஸ்வர் தாத்தாவை நாங்கள் முஸ்லிம்களுக்கு நல்லது செய்வார் என்று எண்ணுமளவிற்கு அவருடைய செயல்பாடுகளும் பேச்சும் ஒருபோதும் இருந்ததில்லை. ஆகவே அவரைப்போன்றவர்களை வைத்து முஸ்லிம்களை எடைபோடவேண்டாம் எல்லா சமுதாயங்களிலும் எல்லாவகையான கூட்டங்களும் உண்டல்லவா அதில் ஒரு கூட்டம்தான் இது, ஆகவே நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே, அஸ்வர் தாத்தாவின் வயதுக்கு அவருக்கு என்னபேசவேண்டுமென்பது புரியவில்லை அனேகமாக அவருக்கு மண்டைக்குழப்பம் என்று நினைக்கின்றோம் ஆதலால் இது போன்ற செல்லாக்காசுகளை கணக்கில் எடுக்காமல் உங்களுக்கு என்ன தோன்றுகின்றதோ அதைச்செய்துகொள்ளுங்கள்.
குகவரதன் சார்,
ReplyDeleteஇந்த ஆள் அஸ்வர் படைத்த இறைவனையே இழிவு படுத்தும் விதமாக பாரளுமன்றத்தில் பேசுகிறவர். இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச வந்தபோது முந்திரிக் கொட்டைபோல இங்குள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று தூதுவர்களே முகங்கோணுமளவுக்கு குதித்தவர்தானே. எப்போதாவது பிரயோசனமாக இந்த ஆள் பேசினதாகக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
நீங்கள் சொல்வதுபோல ஆலவட்டம் வீசத்தனான் இந்த ஆள் சரியான ஆள். அதுக்குத்தான் தேசியப்பட்டியல். இந்த ஆளை நாங்கள் முஸ்லிம்களே ஒரு பொருட்டாகக் கணக்கெடுப்பதில்லை. உங்கள் சமூகத்துக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக செயற்படுபவர்களைக் கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனாலும், அஸ்வர் போன்ற பதருகளின் பேச்சுக்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டு அந்தாளுகளை பெரிய மனிசனுகளாக ஆக்கவேண்டாம். உங்களது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.
கொட்டாஞ்சேனை முதல் வெள்ளவத்தை வரை ஒய்யாரமாக நடந்து செல்லும் தமிழ்ப் பெண்களின் அழகை கள்ளத்தனமாக ரசித்து இன்பங்காணும் இந்த அஸ்வர் மாமாவின் கண்கள், நாளை மறுமையில் பிடுங்கப்பட்டு கொடு நரக நெருப்பில் வீசப்படும் என்பது திண்ணம்!
ReplyDeleteமுஸ்லிம் சமூகப் பெண்களின் அபாயா, நிகாப் பற்றிப் பேச இவர் என்ன முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியா?
மஹிந்தவின் எடுபிடியான இவர் அரசுக்கு ஆலவட்டம் பிடிக்காமல் வேறு என்ன செய்வார்?
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதும் அவர் கடமையன்றோ..?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-