மன்னார் மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்திலிருக்கும் 05
பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 16 ஆயிரத்து 553 (16.7%) இஸ்லாமியர்கள்
வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதியாக
எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பின் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பற்றிய
விபரம் வருமாறு,
பிரதேச செயலகம்
|
இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை
|
மன்னார் நகரம்
|
9069 பேர்
|
முசலி
|
4818 பேர்
|
மன்னார் மேற்கு
|
1445 பேர்
|
நானாட்டான்
|
661 பேர்
|
மடு
|
560 பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 99 ஆயிரத்து 51
பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தால்
கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத் தொகை விபரம்
வருமாறு:-
சமயம்
|
சனத் தொகை
|
வீதம்
|
றோமன்
கத்தோலிக்கர்
|
52230
பேர்
|
52.7%
|
இந்து
|
23464
பேர்
|
23.7%
|
இஸ்லாம்
|
16553
பேர்
|
16.7%
|
ஏனைய
கிறிஸ்த்தவர்கள்
|
4702
பேர்
|
4.7%
|
பெளத்தர்கள்
|
2066
பேர்
|
2.1%
|
ஏனைய சமயத்தவர்கள்
|
36
பேர்
|
-
|
(ஏ.எல்.ஜுனைதீன்) 0714270451
மன்னார் மேற்கு என்பதை மாந்தை மேற்கு என திருத்தி வாசித்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் மாந்தை மேற்கு என்பதற்குப் பதிலாக மன்னார் மேற்கு என தமிழ் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது சம்மந்தமாக மன்னாரிலிருந்து சுட்டிக் காட்டிய சகோதரருக்கு நன்றி. (ஏ.எல்.ஜுனைதீன்)
ReplyDeleteமாந்தை மேற்கு என்ற தகவலைத் தெரியப்படுத்திய மேற்படி அந்த சகோதரர் மன்னாரிலிருந்து அல்ல தான் குவைத் நாட்டிலிருந்து இத் தகவலைப் வாசித்து தங்களுடன் பேசியதாகவும் உண்மையை தெளிவுபடுத்தியதற்காக இரண்டாவது முறையாகவும் குவைத் நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றியைத் தெரிவிப்பதாகவும் ஜப்னா முஸ்லீமை வாழ்த்துவதாகவும் கூறிக்கொண்டார்.சகோதரரின் ஆர்வத்திற்கும் கரிசனைக்கும், நன்றி உணர்வுக்கும் வாழ்த்துக்கள் (ஏ.எல்.ஜுனைதீன்)
ReplyDeleteஇத் தகவலை வாசித்துவிட்டு மன்னார் பெரியமடுவைச் சேர்ந்த முகம்மது சமீம் அவர்கள் குவைத் நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் தொடர்ந்து ஜப்னா முஸ்லிமையே பார்ப்பதாகவும் இவ் இணையத்திற்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துக் கொண்டார். சகோதரரின் ஆர்வத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ( ஏ.எல்.ஜுனைதீன் )
ReplyDelete