ஸஹர் வேளையில் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் பெண் வைத்தியசாலையில் அனுமதி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனைப்பிரதேசசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஸஹர் வேளையில் புனித நோன்பை நோற்பதற்காக தயார் செய்துகொண்டிருக்கையி்ல் பாத்திரம் ஒன்றில் இருந்த நீரை வீட்டிற்கு வெளியில் வீசிய வேளை அங்கு மின்னொழுக்கு ஏற்பட்டிருந்ததை அறியாமையினாலேயே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது.
கல்முனைக்குடி 9ஆம் பரிவில் அல்ஹுதா பள்ளிவாயலுக்கு பின் புறமாக வசித்து வரும் ஜரீமா எனிம் தாயொருவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார். மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே நினைவிழந்து கீழே விழிந்த அவர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment