யாழ்ப்பானம், அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கைத்தொழில் கிராமங்கள்
(எம்.எம்.ஏ. ஸமட்)
இந்திய அரசியன் 40 மில்லியன் ரூபா நிதி உதிவினால் யாழ்ப்பானம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கைத்தொழில் கிராமங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதன் நிமித்தம், இரு மாவட்டங்களிலும் கைத்தொழில் கிராமத்துக்காக தெரிவு செய்யப்பட்டு பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்hன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக அடுத்த 4 மாதங்களில் அம்பாந்தோட்டையில் இக்கைத்தொழில் கிரமாங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான ஒப்பதங்கள் உரிய தரப்புகளுடன் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டமானது இரு மாவட்டங்களிலுமுள்ள அதிகளவிலான சிறு, பாரம்பரிய கைத்தொழிலாளர்களின் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதாக அமைவதுடன் சந்தை வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்கும். அத்துடன் உல்லாப் பயணிகளைக் கவரக் கூடியதாகவும் அமையப்பெறுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment