லிபியா சிறையிலிருந்து ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்
லிபியா தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிறையில் இருந்து இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடி விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய ஆதரவாளர்களின் கட்சி அலுவலகங்களை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தலைநகர் திரிபோலி அருகேயுள்ள கோய்ஃபியா சிறை அருகிலும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த சந்தர்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர்.
கைதிகளில் பெரும்பாலானவர்கள் கொடுங்குற்றத்துக்காக தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க தலைநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Post a Comment