Header Ads



'ஷரீஆ சட்டம் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும்' - சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ


 (Tm) மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தப்படும் ஷரீஆ சட்டம் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் என சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ தெரிவித்தார்.


நீதியரசர் சீ.ஜீ.விரமந்திரியினால் எழுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டவியல் - ஒரு சர்வதேச பார்வை எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு திங்கட்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தப்படும் ஷரீஆ சட்டம் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் இந்த தெளிவின்றியே எமது நாட்டிலிருந்து மக்களை தொழிலுக்காக அங்கு ஏற்றுமதி செய்கின்றோம். இதனால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம். இதனால் அந்த நாடுகளிலுள்ள சட்டங்கள் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.

இந்த நூல் வெளியீட்டு வெளியிட்டு நிகழ்வினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.