இருப்பவற்றையும் பறிகொடுக்கும் பரிதாபகர நிலையில் முஸ்லிம்கள்....!!
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
அரசியலமைப்பின் மீதான 13 ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு வழங்கியிருக்கின்ற சில அதிகாரங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திநேகும சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி சீர்திருத்த சட்ட மூலம் என்பவற்றால் பறிக்கப் பபட்டு விட்டது. தற்பொழுது காணி போலிஸ் அதிகாரம் மற்றும் தேவைப்படின் இரு மாகாண சபைகள் இணைவதற்கான ஏற்பாடு என்பவற்றை வலிதற்றதாக்கும் 19 ஆவது திருத்தச் சட்ட மூலம் அரசியல் களத்தை சூடேற்றியுள்ளது.
தேசிய அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புக்களின் பொழுது மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள இன்னோரன்ன விவகாரங்களில் சகல மாகாண சபைகளின் ஒப்புதலும் அவசியமில்லை எனும் ஷரத்து எச்ச சொச்ச அதிகாரங்களையும் பறிக்கும் முயற்சி என்பதானால சிருபாணமி சமூகங்கள் கவலை கொண்டுள்ளதோடு, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வலியுறுத்தும் பெரும்பான்மை இன அமைச்சர்கள் சிலரும் எதிர்க் கட்சியினரும் தமது பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை தெளிவாக ஆராயப்பட்ட முடிவுகள் எதனையும் முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து எடுக்கா விட்டாலும் ஒரு பிரதான் முஸ்லிம் கட்சி 19 ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்ற அதேவேளை அதிலிருக்கும் பிரதானி ஒருவர் ஒரு சில சகாக்களோடு புதிய அணியொன்றை தோற்றுவித்து அரசுக்கு ஆதரவளிக்கலாம் என நம்பப் படுகிறது, தனது மவுசு இப்பொழுது கூடியுள்ளதாக அவர் காட்டமாக பிரகடம் செய்துமுள்ளார்.
இன்னும் இரு பிராந்தியங்களின் முஸ்லிம் பிரதானிகளின் கட்சிகளும் அரசுக்கு ஆதரவளிப்பதனை தவிர தற்போதைக்கு வேறு மார்க்கம் இல்லை என்ற நிலைப் பாட்டில் இருப்பதாக தெரிகிறது. அதேவேளை 19 ஐ எதிர்க்கும் பிரதானி தனது கட்சியின் பூர்வாங்க அனுமதியை பெறாது பிறிதொரு பின்புலத்தில் செயற்படுவதாகவும் உள்வீட்டுச் சர்ச்சைகள் தெரிவிக்கின்றன.
இந்த மண்ணிலும் ஒரு ராபியத்துல் அதவிய்யாவும் ஒரு தஹ்ரீருமாக நாங்கள் பிளவு பட்டிருக்க, ஒட்டு மொத்த சமூகத்தினதும் தேசத்தினதும் நலன்கள் பெரும்தேசியவாத சக்திகளாலும் சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளாலும் காவு கொள்ளப் படும் என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாக தெரிகிறது. துருக்கியின்,எகிப்தின் சட்ட யாப்பு ,இராணுவத்தின், ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசியலமைப்பு ஏற்பாடுகள், ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தல்கள் ,உயர்சபைகள் மேல்சபைகள் குறித்தெல்லாம் நுணுக்கமான அறிவு படைத்த எமக்கு இந்த 13 மற்றும் 19 குறித்து எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை..!
13, 19 பற்றிய நுனுக்கமான அறிவு யாருக்கு இல்லாவிட்டலும் நம்ம அசாத் சாலிஹ் தொரைக்கு உண்டு சார்.
ReplyDeleteஎல்லோருமா சேர்ந்து அந்த அசாத் சாரை வெற்றிபெறச்செய்து விட்டால் நமது இஸ்லாமிய கிலாபத்தினுடைய ஆட்சியே கிடைத்தமாதிரி இருக்குமல்லவா?
muslimkalukku 13&19 um piratchinaiillei. muslimkal muslimkalaha waalnthal poathum. aehtho 13 um 19 um siraathul musthakeem paalam poala
ReplyDelete