ஜாவா கடலில் மூழ்கிய கப்பல் - இலங்கையரின் சடலங்கள் கரையொதுங்கியது (படங்கள்)
அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 11 அகதிகள் மரணமாகியுள்ளனர். மரணமானவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை இலங்கை பெண்ணினதும், ஈரானிய ஆண் ஒருவரினதும் சடலங்கள் கரையொதுங்கின.இதையடுத்து மரணமானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் படகில் பயணம் செய்த 204 பேரில், 189 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால், பயணத்தை ஆரம்பித்த 9 மணி நேரத்தில் இந்தப் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து சில அகதிகள் உயிர்காப்பு படகில் ஏறித்தப்பினர். பலர் கடலில் குதித்து நீந்திய போது, மீனவர்களாலும், இந்தோனேசிய காவல்துறையினராலும் காப்பாற்றப்பட்டனர்.
அதேவேளை இந்தப் படகில் பயணம் செய்த 44 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. மீட்கப்பட்டவர்கள் குடிவரவு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தப் படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். காணாமல் போனவர்களின் சடலங்களே தற்போது கரையொதுங்கிவருவதாக கூறப்படுகிறது.
إنا لله وإنا إليه راجعون
ReplyDelete