றமழானை வரவேற்கும் முகமாக முதியோருக்கு அரிசி விநியோகம்
(R. Zuhthee Zahaan)
புனித றமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக புதிய காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள முகைதீன் மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி 'அதாலா பௌண்டேஷன்' நிறுவனம் அச்சங்கத்தின் அங்கத்தவர்களான முதியவர்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கியது.
(08.07.2013) புதிய காத்தான்குடி அப்றார் வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இலவசக் கல்வி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மேற்படி முதியோர் சங்கத் தலைவர் ஜனாப். கே.எம்.எம். ஏ. காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதாலா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களான அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி, ஜே.எம். பஸ்ரி ஆகியோர் சமூகமளித்து முதியோர்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
Post a Comment