Header Ads



சிங்கள - முஸ்லிம் மக்களிடையே சந்தேகங்கள் வளர அரசாங்கம் துணை போயுள்ளது


(எம்.எம்.எம். ரம்ஸீன்) 

ஹலால் தொடர்பான தேவையற்ற பிரச்சினையைத் தோற்றுவித்து சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில்  வீண் சந்தேகங்கள் வளரவும் இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படவும் அரசாங்கம் துணை போயுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாந்து குற்றஞ்சாட்டினார். 

உடுநுவர தொகுதி ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் பொதுக்கூட்டம் உடுநுவர பிரதேச சபை மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை 07.07.2013   நடைபெற்ற போது அவர் கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி சகல இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாகும். நாம் இனவாத சக்திகளுக்கு துணைபோக மாட்டோம். அண்மையில் ஹலால் ஹராம் என்று தேவையற்ற பிரச்சினைகள் உருவாகி இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சியை நாம் அறிவோம். இதனை அரசாங்கம் தடுக்கவில்லை. 

ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்  ஐக்கிய தேசிய கட்சிக்கு வெற்றிகளைக் கொண்டு வரும் தேர்தலாக அமையும். கடந்த மூன்று வருடங்களில் நடைபெற்ற தேர்தலிகளில் ஆளும் கூட்டணி அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களின் விகிதாசாரம் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதைத் தெளிவாக அவதானிக்க முடியும். எனவே இத்தேர்தல் அரசாங்கத்திற்கு வாக்குகளை அதிகரிக்கும் தேர்தலாக அமையமாட்டாது.   

இந்த தேர்தல் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக எதிர்க்கட்சிகளால்  கருதப்படுகின்றது. இத்தேர்தலைத் தொடர்ந்து வரும் சகல தேர்தல்களிலும் அரசாங்கம் தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கவுள்ளது என்றார். 




2 comments:

  1. அரசாங்கத்தின் உன்மை நிலைப்பாட்டை அனைவரும் ஏற்கனவே தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனமாயிருந்தார்கள் ஆனால் நாளடைவில் நிலைமை வெகு மோசமாகவும் நாட்டின் நிலைமையோ பலவகையாலும் பின் தள்ளப்பட்ட நிலையில் இருந்துகொண்டிருக்கின்றமையாலும் தற்போது சிறுபான்மையினருடன் பெளத்தமக்களும் சேர்ந்தே குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது... இதுபோன்றே ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தின் உண்மை நிலைப்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்.....

    ReplyDelete
  2. engalai vaithu arasiyal nadaththamal erunthal sari

    ReplyDelete

Powered by Blogger.