அகில இலங்கை பேச்சுப் போட்டி - மாணவி நுஸ்கா ஹானி நளீர் முதலிடம்
அகில இலங்கை ரீதியிலான தமிழ் மொழித்தின போட்டி நிகழ்வுகள் சென்ற ஞாயிறு 2013.07.07ல் கொழும்பு றோயல் கல்லுரியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு 09 மாகாணங்களிலும் இருந்து பல மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.
பேச்சுப் போட்டி பிரிவு - 2ல் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மாகா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவி நுஸ்கா ஹானி நளீர் என்பவர் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர் நளீர் - சியானா தம்பதிகளின் மூத்த புதல்வியாவார். தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு கைரியா முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில் கற்ற இவர் தனது இடைநிலைக் கல்வியை தற்போது அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் கற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congrats Nuska!
ReplyDelete