'சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிமுறை முஸ்லிம்களிடம் உள்ளது'
(ஏ.ஜே.எம்.சாலி)
திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் 23-07-2013 ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவத்தில் கிழக்கு ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம உரையாற்றிய போது தெரிவித்த கருததுக்கள்,
இங்கு நடைபெறும் இப்படி ஒரு இப்தார் வைபவம் உலகத்தில் கூட நடைபெற முடியாது சமயங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு விட்டுகொடுப்பில்லாமல் வாழும் சமூகத்தில் இந்த இப்தார் சிறந்த உதரணமாகும். இங்கு யார் இல்லை, எந்த சமயம் இல்லை, எல்லோரும் இருக்கிறோம்.இது இலங்கையில் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும். சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழிமுறைகள் முஸ்லிம் சமயத்தவரிடையே இருப்பதை இட்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். கிழக்கு மாகாணம் இப்படி ஒற்றுமையால் நிரம்பி வழிய வேண்டும் என்றார்.
Post a Comment