நடைபாதை சில்லறை வியாபாரமாக மாறிவரும் ஹஜ்ஜு உம்ரா பயணங்கள் !
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
2006 ஆண்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி வயது முதிர்ந்தவரை ஒரு ஹஜ் ஏற்பாட்டுக் குழுவினர் சவூதி அரேபியாவுக்கு அழைத்து வந்திருந்தனர், ஹஜ் முடிந்ததும் நோயுற்ற அவரை மக்காவில் அப்துல் அஸீஸ் மருத்துவ மணையில் சேர்த்து விட்டு ஹஜ் பயண முகவர் நாடு திரும்பி விட்டார்.
அவரை வைத்தியசாலையில் இருந்து நாட்டுக்கு அனுப்புமாறு இலங்கை கொன்சல் காரியாலயத்துக்கு சவூதி அதிகாரிகளால் நெருக்குதல்கள் வந்தன, அவரை கைவிட்டு விட்டு நாட்டுக்கு சென்ற முகவரை தேடி அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சையும் , விவகார அமைச்சையும் நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒருவாறு ஏற்பாடுகளைச் செய்தோம்.
ஆனால், அவர் இருக்கும் கவலைக்கிடமான நிலையில் அவரை அழைத்துச் செல்ல எந்தவொரு விமான சேவை நிறுவனமும் முன்வரவில்லை, ஏனெனில் அவரது நிலைமை நடுவானில் கவலைக்கு மேலும் மோசமடைந்தால் வேறு ஒரு நாட்டில் தரையிறக்க வேண்டியேற்படும் என்றார்கள், எப்படியோ சவூதி அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடி தூதுவராலயத்தில் கடமை புரியும் ஒருவருடன் நாட்டுக்கு அனுப்பி வைத்தோம்!
இலங்கையில் விமானம் தரையிறங்க ஓரிரு நிமிடம் இருக்க அந்த ஹாஜி வபாத் ஆகி விட்டார் எனவும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் எமக்கு தெரிவிக்கப் பட்டது.
கவலைக்குரிய விஷயம் என்ன வென்றால் குறிப்பிட்ட முகவர் தனது ஊரைச் சேர்ந்த மக்காவில் வாழும் கூலித் தொழிலாளி ஒருவரிடம் கைக் காசை கொடுத்து இவரை தினமும் பார்த்து விட்டுச் செல்லுங்கள், பெரும்பாலும் ஓரிரு நாள் தான் ,அப்படி ஏதாவது நிகழ்ந்தால் இலங்கை கொன்சல் காரியாலயத்துக்கு தெரிவியுங்கள் என்று தூதரக தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்துவிட்டு சென்றிருந்தார்.
ஹஜ் உம்ரா சேவைகள் தனியார் நிறுவனங்களால் நடத்தப் படுபவை , உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை பொறுப்பு ஏற்க மாட்டாது, தேவைப்படும் அத்தாட்சிப் படுத்தல் அங்குள்ள அரச நிறுவனங்களுடன் தொடர்புகொல்லல் போன்ற விடயங்களி மாத்திரமே தூதரகங்களுக்கு செய்ய முடியும்.!
இறுதி நேரத்தில் அவரது இரண்டு பெண்பிள்ளைகள் பற்றி கவலைப்பட்டுக் கொண்ட அவரது பிள்ளைகளுக்காக சம்சம் நீரும் பேரீச்சம் பழங்களும் ஒரு சில பரிசுப் பொருட்களையும் அவரை சுகம் விசாரிக்க வருபவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் ஒரு நல்ல உள்ளம் படைத்த ஊழியர் வங்கி தந்தார் ! சுகயீன முற்ற நிலையிலும் வெறும் கையுடன் அவர் நாடு திரும்புவதனை சீரணித்துக் கொள்ள முடியாதிருப்பதாக அந்த நண்பர் கூறினார்.
முறையான காரியாலயங்கள் இல்லாது, இவ்வாறு அவசர நிலைமைகளில் பொறுப்பு ஏற்க தகைமை ,வசதி ,பண பலம் ,பின்புலம் இல்லாத நடை பாதை முகவர்களிடம் ஹஜ் உமராவுக்காக பணத்தையும் கடவுச் சீட்டையும் கொடுத்து விடாதீர்கள் !
நோயாளிகளை, வயது முதிர்ந்தவர்களை ஹஜ் உம்ராவுக்காக அனுப்பி வைக்காதீர்கள், வயது முதிர்ந்த பெற்றோரை முகவர்களை நம்பி துணையின்றி அனுப்பி வைக்காதீர்கள் !
இவ்வாறு ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன !
காத்தான்குடியிலும் இப்படி உம்றா செய்த ஒன்பது பேரின் சோகக் கதையொன்று இருக்கிறது கலாநிதிதி அவர்களே..!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ, காத்தான்குடி-