Header Ads



அமைச்சர் றிசாத்தின் அழைப்பில் அதாவுல்லா மன்னார் செல்கிறார்

(ஜே.எம். வஸீர்) 

தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் அழைப்பின் பேரில் நாளைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

அன்றைய தினம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின்  கீழ் இயங்கும் ஆசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிதி உதவியின் கீழ் 180 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு வீதிகள் திறந்து வைக்கப்படவுள்ளன. 

வீதிகள் வருமாறு 

1. தலைமன்னார் விலேஜ் வீதி
2. கரிசல் வீதி 
3. எஸ்ப்பிளனேட் வீதி
4. பள்ளிமுனை கடற்கரை வீதி 

மேலும் அன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நானத்தான் பிரதேச சபைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடமும் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் பள்ளிமுனை நகரில் பொதுக்கூட்டமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

அமைச்சர் அதாஉல்லா 02ம் திகதி  முழுநாளும் மன்னார் மாவட்டத்தில் தங்கியிருந்து முசளி போன்ற பல கிராமங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுனர் பீ.ஏ. சந்திரஸ்ரீ மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள்  அமைச்சின்   செயலாளர்  ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, மேலதிக செயலாளர் ஏ. அப்துல் மஜீத் மற்றும் பிரதேச தலைவர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

2 comments:

  1. பாட்டுப் பாடவா

    ReplyDelete
  2. இல்லை! வடக்குத் தேர்தலில் பப்படம் பொரிக்க!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.