Header Ads



ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம்

சர்வதேச ரீதியில் ஆயுத வன்முறை காரணமாக ஆபத்தான பட்டியலில் இலங்கை ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது.

ஜெனீவாவில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆயுத வன்முறைகள் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த யூன் மாதம் 25ம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆயுத வன்முறை காரணமாக ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் இழக்கப்படுவதாகவும்  ஒவ்வொரு ஆண்டும் வன்முறை காரணமாக அரை மில்லியன் மக்கள்
(526 000) மரணமடைவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 10 வீதமானவர்களே மோதல்கள் காரணமாக இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கப்படத்தில் முதலாவதாக மிக ஆபத்தான நாடாக எல் சல்வடோரும் இரண்டாவதாக ஈராக்கும் காணப்படுகிறது. தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் இலங்கை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆயுத வன்முறை, இன மத தோதல்கள் காரணமாக ஏற்படும் இறப்புக்கள் அதிகரித்து வருவதாக  மேலும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


4 comments:

  1. பாதுகாப்பு செயலாளரே இது உங்கள் கவனதிக்கு ..புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கபட்டு 3 வருடங்களின் பின்னரும் இந்த நிலைமை எனின் அதன் பின்புலம் உத்தியோக பற்றட்ட குறிப்பிட தக்க காவி உடை இராணுவம் தானே....???

    ReplyDelete
  2. இது தற்போதைய அரசாங்கத்துக்கு கிடைத்த கெட்ட பெயர் என்று சொன்னாலும். இது தற்போதைய நாட்டு நிலைமையின் ஆபத்தான நிலையையே குறிப்பிட்டுக்காட்டுகின்றது. இது மட்டுமல்லாமல் இன்னும் எத்தனையோ பட்டியல்கள் வெளியாகியுள்ளது அவைகளிலும் இலங்கை மிகவும் மோசமானதொரு இடத்திலே இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவைகளை மீண்டும் கட்டியெழுப்ப நாட்கள் தேவைப்படும்.

    ReplyDelete
  3. Ok America Ehthunavazu Azuthan Muzalavazaha Irukka veandum.

    ReplyDelete

Powered by Blogger.