Header Ads



காதலர்களுக்கு என 800 இலட்சம் ரூபாவில் தனியான பூங்கா அமைக்கும் அரசாங்கம்


(TM) காதலித்துக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகள் எவ்விதத் தடையுமின்றி சந்தித்து கலந்துரையாடுவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, இளைஞர் பரம்பரையை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் பூங்காக்களை அமைக்க இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்பிரகாரம், மேற்படி அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது பூங்கா, மாத்தறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 800 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேற்படி பூங்காவில் சிற்றுண்டிச்சாலை, திரையரங்கு, நிகழ்ச்சி மண்டபம், வாசிகசாலை ஆகிய வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இளைஞர்களை மையப்படுத்தி நாடு முழுவதும் பூங்காக்களை நிறுவுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த போதிலும் கலாசார ரீதியான பிரச்சினைகள் காரணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


4 comments:

  1. Arasaankam koottik kodukkap pokirathu...

    ReplyDelete
  2. payapulle Uruppadum Nam Naadu........ engayya podu Bala Senaa?
    koottikodukurede nippatte sollunge

    ReplyDelete
  3. சும்மா ஏறின குரங்குகளுக்கு ஏணி வெச்சிக் குடுக்கானுங்க.

    ReplyDelete
  4. it's better 2 arrange abortion facility also

    ReplyDelete

Powered by Blogger.