60 வருடங்களின் பின் ஆலை உதவி முகாமையாளர் பதவிக்கு ஒரு முஸ்லிம் நியமனம்
(அப்துல்லாஹ்)
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் அமைந்துள்ள தேசிய கடதாசி ஆலைக்கு சுமார் 60 வருடங்களின் பின்னர் அதன் உற்பத்திப் பிரிவுக்குப் பொறுப்பான ஆலை உதவி முகாமையாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 35 வருடங்களாக உற்பத்தி முகாமையாளராகப் பணியாற்றிய ஜே. அஹமது லெப்பை என்பரே உற்பத்திப் பிரிவுக்குப் பொறுப்பான ஆலை உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனியின் தகுதி வாய்ந்த அதிகாரி மங்கள சி. சேனரத் தெரிவித்தார்.
இந்த நியமனம் ஜுலை 14 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. முன்னர் தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனமாக இயங்கி வந்த இந்த காகித உற்பத்தித் தொழிற்சாலை பின்னர் தேசிய கடதாசிக் கம்பனியாக பெயர் மாற்றம் பெற்றது.
தற்சமயம் வாழைச்சேனை தேசிய கடதாசிக் கம்பனியில் நிரந்தர ஊழியர்களாக 165 பேரும் தற்காலிக அடிப்படையில் 62 பேரும் என மொத்தம் 227 பேர் கடமையாற்றுகின்றார்கள்.
Post a Comment