Header Ads



பாரிசில் துணிகரம் - துப்பாக்கி முனையில் 513 கோடி வைரம் திருட்டு

ஐரோப்பாவின் மிகப் பெரிய நகை கண்காட்சி பாரிசில் நடைபெற்றது. அதில் ஆசாமி ஒருவன் துப்பாக்கி முனையில் ரூ.513 கோடி மதிப்புள்ள வைர நகைகளை திருடி சென்றான்.பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள கார்ல்டான் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலாகும். இது சர்வதேச அளவில் சொகுசு ஓட்டல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு அடிக்கடி பல்வேறு ஆடை, ஆபரண கண்காட்சிகள் மற்றும் விற்பனை நடைபெறுவது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் ஐரோப்பாவின் மிகப் பெரிய நகை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பா முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய, ரத்தின, பவள நகைகள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டன. அவை மிக அழகாக ஷோகேஸ்களில் வைக்கப்பட்டிருந்தன. 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்ததால் ஓட்டல் மற்றும் அதை சுற்றி பலத்த கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான பிங்க் பேந்தர் என்ற கொள்ளை கும்பலை சேர்ந்த ஆசாமி ஒருவன், 2 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்திருந்தான். உடனடியாக ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஒரு சூட்கேசுடன் நேற்று கண்காட்சி நடந்த ஓட்டலுக்கு சென்றான். அங்கு வாசலில் இருந்த பாதுகாப்பு படையினரை துப்பாக்கிமுனையில் மிரட்டி ஓட்டலுக்குள் நுழைந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.513 கோடி மதிப்புள்ள வைர நகைகளை சுருட்டி சூட்கேசில் போட்டு கொண்டு காரில் தப்பி சென்றான். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் அந்த ஆசாமி தப்பினான். இந்த சம்பவம் பாரிசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 comment:

  1. an aversion Activity by Christianity Terrorism.

    Since this is an Christianity Terrorism Western Medias gave less priority for this AS USUAL.

    If u think this was made by any Muslim named person the reflection will be very high and all western medias may act of competing to publish this news and call Musilm terrorism.

    ReplyDelete

Powered by Blogger.