Header Ads



ஒரே சூலில் பிறந்த 5 குழந்தைகளில் 1 மரணம் - மடவளையில் ஜனாஸா நல்லடக்கம்

(எம். ஏ. அமீனுல்லா) கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று 01-07-2013 உயிரிழந்துள்ளது. பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த குழந்தை இறந்துள்ளது.

குழந்தையின் ஜனாஸா மடவளை பஸார் ஜாமியுல் கைநாத் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நேற்று பி.ப. 3.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மடவளையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி தனது முதலா வது பிரசவத்தின் போது கடந்த 27ம் திகதி கண்டி பெரியாஸ்பத்திரியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.