Header Ads



மாத்தறையில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைபொருள் மீட்பு, 'குடு காமினி' யும் கைது

நான்கு கோடி ரூபா ஹெரோயின் போதை வஸ்துக்களை மாத்தறை மோசடி ஒழிப்பு அதிகாரிகள் 29-07-2013 கைப்பற்றியுள்ளனர். தென் மாகாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதை வஸ்த்து தொகை இதுவென சுற்றிவளைப்பை மேற்கொண்ட உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென் மாகாணத்தில் போதை வஸ்த்து விநியோகிக்கும் பிரதான சந்தேகத்திற்கு உரியவரான “பத்தோல காமினி” எனப்படும் “குடு காமினி” இந்த சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கில் மூலம் போதை வஸ்த்துக்களை கடத்திச் சென்ற போது பலனை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இவருக்கு உதவிய மேலும் ஐந்து சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். Sfm

1 comment:

  1. ஜம்இய்யதுல் உலமாவின் பங்களிப்பு இல்லாமலேயே பௌத்த சமூகத்தினர் மேற்கொள்ளும் போதைப் பொருள் வியாபாரத்தை பொலீசார் முறியடித்து வருகிறார்கள் என்பதை இப்போதாவது பொது பல சேனா புரிந்து கொள்ள வேண்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.