இறக்குமதியாகும் 4 வகை பால் மாக்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் =
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு வகையான பால் மாக்களில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டி.சி.டி (டைசயான் டமைய்ட்) என்ற இரசாயன பதார்த்தமிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக தொழில் நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் 4 வகையான பால் மாக்களில் இந்த இரசாயனப் பதார்த்தம் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதில் நான்கு வகை பால் மாக்களில் டைசயான் டமைய்ட் எனும் இரசாயன பதார்த்தம் இனங்காணப்பட்டுள்ளது. சந்தையில் மிகவும் பிரசித்திப் பெற்ற நான்கு வகையான பால் மாக்களிலேயே குறித்த இரசாயன பதார்த்தம் இனங்காணப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் விற்பகப்படும் அனைத்து பால் மா வகைகளையும் பரிசோதனைக்குட்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளதாக தொழில் நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் ஊடக செயலாளர் தனுஸ்க ராமநாயக்க தெரிவித்தார்.
இந்த நான்கு வகை பால் மாக்கள் மேலும் சில பரிசேதனைகளுக்குட்படுத்தப்பட்டு ஆய்வறிக்கை கிடைத்தவுடன் சந்தையிலிருந்து அப் பால் மாக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் . இந்த சோதனை நடவடிக்கைகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளிலும் மேற்கொள்ளப்பட்டதுடன் உள்நாட்டு பால் மாக்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வித இரசாயனப் பதார்த்தமும் காணப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
Stop those milk powders immediately
ReplyDeleteஎவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;
ReplyDeleteஅவர்ää அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்;
அவர்களுடைய பளுவான சுமைகளையும்ää அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்ää(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்;
எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பிää அவரைக் கண்ணியப்படுத்திää அவருக்கு உதவி செய்துää அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோää அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.(அல்-குர்ஆன்: 7:157. )
Why dont the authorities disclose the name of the milks to the public so that they can stop buying it. why should they hide the names of those milks anonymous? something behind it?
ReplyDeleteஅந்த நான்கு வகைப்பால்மாவின் பெயரையும் விபரம் தெரிந்தவர்கள் வெளியிட்டு நம்மவர்களுக்கு உதவிசெய்யவும் நாம் சொந்த நாட்டுக்குள்ளேயே பலராலும் அதேவேளை சகல இன மக்களுக்கும் தந்தைபோன்று செயற்படவேண்டிய எமது ஜனாதிபதியே மிகவும் கேவலமாக தனது செயல்பாட்டினை வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றார். ஆதலால் நாம் கூடியளவு எதுவிதப்பால்மாவையும் வாங்காமலும் பாவிக்காமலும் இருப்பது நன்று பசும்பால் தயாரிப்பை அதிகப்படுத்தி எமது மக்களுக்கு பால் பிரயோசணத்தை அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கவேண்டும் அதனால் பல பிரச்சினைகளிலிருந்து எமது சமூகத்தைப்பாதுகாக்கலாம்.
ReplyDelete