முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தீ - பௌத்த தேரர் தீயை அணைக்க களத்தில் குதிப்பு
(சாஜஹான் பாஸ்கான்)
நேற்று 07.07.2013 இரவு 7 மணியளவில் நிகவெரட்டிய நகரின் முஸ்லிமொருவருக்கு சொந்தமான பலசரக்கு மொத்த வியாரநிலையமொன்று தீப்பற்றி எறிந்து முற்றாக தீக்கிரையானதுடன் அதற்கருகிலிருக்கும் இரண்டு கடைகள் பெரும் சேதத்துக்குள்ளாகின.
நகரின் இளைஞர்களும் பொலிசாரும் மெற்கொண்ட கடுமையான முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயனைக்கும்முயற்சியில் சிங்கள வாலிபர்கள் பலர் முன்னின்று செயற்பட்டனர். அத்தோடு நிகவெரட்டிய எலவக்க ஆனந்தாராமையின் விகாராதிபதி மொரவக்க விமலானந்த தேரர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து தீயனைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.
குறித்த பௌத்த பிக்கு நிகவெரடடிய முஸ்லிம் வர்த்தகர்களோடு மிகவும் சுமுகமான உறவைப்பேனுபவரென்பது குறிப்பிடத்தக்கது. குருநாகல் நகரிலிருந்து தீயனைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வரும்போது தீயின் பெரும்பகுதி கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த கடைகள் இவ்வாரு தீப்பற்றி எறிந்ததற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
great sir, if galagoda ettho know about this, some times he angry with him
ReplyDeletesariya sonneenga boss..
Deletethe lord BUDDHAS true follower -the real buddhist monk
ReplyDeleteThis is what is called as living together as one nation... good example.. Thankful to Morawaka Wimalaratne Thera for your greatness.
ReplyDelete