Header Ads



பாடசாலையை உடைத்து கொம்பியூட்டர் திருடிய 3 மாணவர்கள் கைது

(Vi) அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை பிரபல பாடசாலை ஒன்றின் கணனி அறையை உடைத்து சுமார் 45 ஆயிரம் பெறுமதியான கணனி மற்றும் உபகரணங்களை திருடிய பாடசலை மாணவர்கள் மூவரை நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட ஒன்றை திருத்துவதற்காக அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு கொண்டு வந்த பொழுது இந்த கனணி குறித்த பாடசாலையில் திருடப்பட்டது என்று வர்த்தகருக்கு தெரிய வந்துள்ளது. அதனையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் கொடுத்த தகவலின் பின்னர் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் இன்று சனிக்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.