அடுத்துவரும் 3 தசாப்தங்களில் இலங்கையின் சனத்தொகையில் 25 வீதமானோர் முதியவர்கள்
(எம்.எம்.ஏ.ஸமட்)
அடுத்து வரும் 3 தசாப்தங்களில் இலங்கையின் சனத்தொகையில் 25 வீதமானோர் முதியவர்களாக இருப்பர். இவ்வாறு, தேசிய முதியோர் சபையின் முன்னால் தலைவர் ஜே.வி. தம்பர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் தகவலின் படி 2020ஆம் ஆண்டில் இலங்கiயின் சனத் தொகையில் 20 வீதத்தினர் முதியவர்களாக இருப்பர். இத்துடன் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் முதியவர்களும் விதைவைகளுமே அதிகமாக இருப்பர் என அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, முதியோர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் 2000 ஆண்டு சமூக சேவைகள் அமைச்சினால் கொண்டவரப்பட்டது. இதன் நிமித்தம் தேசிய முதியோர் சபை ஸ்தாபிக்கப்பட்டு அச்சபையினூடாக முதியோர்களின் நலன்கள் பேணப்பட்டு வருகின்றன.
கிராம மட்டத்தில் முதியோர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றினூடாக சிரேஷ்ட பிரஞைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்ப்பட்டுள்ளன. 10 ஆயிரம் முதியோர் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், 8 இலட்சத்துக்குமதிகமான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுளளன.
அத்துடன் இச்சங்கங்களின் மூலம் விவசாயம், வீட்டுத் தோட்டம், சிறுகைத்தொழில், பாரம்பரிய கைத்தொழில் என்பற்றிலும் இச்சங்கங்களின் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் அரச ஊழியர் ஒருவர் ஓய்வடையும் வயதெல்லை 60 ஆகவும் ஆண்களின் ஆயுட்காலமானது 74 வயதாகவும் பெண்களின் ஆயட்காலமானது 80 வயதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment