இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்
இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது.
அதைத்தொடர்ந்து பாப்வெர்த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளியில் இருந்தபடியே ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டது.
அதன் மூலம் இதயம் இல்லாமல் சுமார் 2 ஆண்டுகள் மாத்யூகிரீன் உயிர் வாழ்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில்தான் அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்தப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரீன் ''நான் மிக அதிர்ஷ்டசாலி என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் இருதய மாற்று ஆபரேசன் மூலம் நான் 3–வது தடவையாக உயிர் பிழைத்து இருக்கிறேன்'' என்றார்.
Post a Comment