வானம் தருகின்றதா? திருப்பித் தருகின்றதா? ரமழான் முத்துக்கள் (கேள்வி 2)
மாலை நேரத்தில் கதிரவன் தன் கதிர்களை மடித்துக் கொண்டு விடைபெறும் நேரத்தில் அந்தி வானத்தின் அழகைக் கண்டு இரசித்திருக்கிறோம். மெய் சிலிர்த்துப் போயிருக்கிறோம். ஆஹா! என்ன அழகு என்று ஆச்சரியப்பட்டிருக்கிறோம். ஆனாலும், வானத்தைப் பார்த்து இயற்கையை இரசித்த நாம் ஒன்றை மறந்து விட்டோம். வானத்தின் தன்மைகளை படிக்க மறந்து விட்டோம்.
வானத்தைப் பற்றிய ஆய்வுகளில் அக்கறை கொள்ளாமல் இருந்து விட்டோம். எனவே வானத்தினால் நாம் பெறும் பயன்களை நினைவூட்டுவதற்கே இந்தக் கட்டுரை. அல்லாஹுதஆலா நமக்களித்த அருட்கொடைகளை நினைவூட்டுவதோடு, அல்குர்ஆன் வாழும் ஓர் அற்புதம் என்பதையும் நிரூபித்துக் காட்டுவதே இதன் நோக்கமாகும்.
திருக்குர்ஆன் நாம் வாழும் பூமியைப் பற்றி மட்டும் பேசவில்லை. நமக்கு நெருக்கமாகவுள்ள மரங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக அருகில் இருப்பதாயினும் தொலைவில் இருப்பதாயினும் சரி எல்லா பொருட்கள் பற்றியும் அனைத்து வளங்கள் பற்றியும் பேசுகின்றது. உலகில் படைப்புகள் அனைத்தையும் பற்றிப் பேசுகின்றது.
நாம் அந்தக் குர்ஆன் வசனங்களை மட்டும் வெறுமனெ பார்த்து விட்டு குர்ஆனை மூடிவைக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். குர்ஆன் ஆராய்ச்சி செய்யுமாறு பணிக்கும் விடயங்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் இறைவனின் அன்பு கிடைக்கும். இறையச்சமும் ஏற்படும்.
திருக்குர்ஆன் வானத்தைப் பற்றிப் பேசுகையில், ஷதிருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக| (86:11) என்று இறைவன் வானத்தின் மீது சத்தியமிடுகிறான். வானத்திற்கு பல அடைமொழிகள் இருக்கின்றன. பலரும் பலவாறு வானத்திற்கு டைமொழிகளை கூறுவார்கள். அழகான வானம், நீல நிற வானம் என்றெல்லாம் கூறுவார்கள். அப்படியிருக்க ஒருவரும் சொல்லாத யாருமே அறியாத அடைமொழியைக் கொண்டு இறைவன் பேசுகிறான். ஷவானத்தை திருப்பித் தரும் வானம்| என்று கூறுகிறான். உண்மையில் வானம் திருப்பித் தருமா? என்பதை தொடராகப் பார்ப்போம்.
இறைவன் ஒரு வார்த்தையைக் கூட வீணுக்குப் பேச மாட்டான் என்று நம்பியிருக்கிறோம். அந்த அடிப்படையில் வானத்தின் மீது சத்தியமாக என்று கூறாமல் ஷதிருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக| என்று ஏன் கூறுகிறான்? என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
வானத்தை பொறுத்தமட்டில் அது நிறைய விடயங்களை திருப்பித் தந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாக, வானத்துக்கு என்று சில முக்கியமான பண்புகள் இருக்கின்றதாக நவீன விஞ்ஞானம் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. அந்தப் பண்புகளில் திருப்பித் தரக் கூடியது என்ற பண்பு மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் கடல்களிலிருந்து, ஆறுகளிலிருந்து, நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் மேல் நோக்கி உறிஞ்செடுக்கப்பட்டு பிறகு மழையாக நமக்கு திருப்பி தரப்படுகிறது. இது ஒரு விதம்.
வீட்டிலிருந்து தொலைக்காட்சிகள், வானொலி மூலமாக உலக நடப்புகளை பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். இதுவும் வானத்தின் திருப்பித் தரும் பண்பினால் ஏற்படும் அதிசயமாகும். இது எப்படி என்றால், நாம் ஒரு விடயத்தை ஒலிபரப்ப நினைத்தால் அதை வானத்துக்கு அனுப்பி விட வேண்டும். வானம் அதை பூமிக்கு அனுப்பி விடும்.
நீங்கள் பாவிக்கின்ற கையடக்கத் தொலைபேசி கூட வானத்தின் இந்த அடிப்படை பண்பினால்தான் இயங்குகின்றது. குறிப்பாகச் சொன்னால் இன்று உலகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதாக நாம் பேசிக் கொள்வது, வானத்தின் இந்தப் பண்பைக் கண்டுபிடித்ததால்தான். அந்தப் பண்பை மட்டும் மனிதன் கண்டறியாவிட்டால், இத்தனை வசதிகளையும் அவனால் அனுபவித்திருக்க முடியாது. திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி கூறுவார்களா? அதுவம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?
இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்றால், நிச்சயமாக அது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது. படைத்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்.
1400 ஆண்டுகளுக்கு முன் இவ் விஞ்ஞான உண்மை கர்ஆனில் பேசப்பட்டிருக்கின்றதா? என்று ஆச்சரியப்படலாம். கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அந்தக் காலத்தில் வியத்தகு விஞ்ஞான உண்மைகளை திருக்குர்ஆன் அடுக்கடுக்காக பேசிக் கொண்டிருக்கிறது.
பாலின் அற்புதம்
ஒவ்வொரு நபிமார்களுக்கும் அற்புதங்க ளுடன் அனுப்பப்பட்டார்கள். எனக்கும் வழங்கப்பட்ட அற்புதம் அல்குர்ஆன் (புகாரி, முஸ்லிம்) இன்னும் ஓர் அற்புதத்தை ஆராய் ந்து நாம் ஈமானை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
திருமறை குர்ஆனில் ஸூறா அந்நஹ் லில் 16ஆவது அத்தியாயம் 66 ஆவது வச னத்தில் ஷகால்நடைகளில் உங்களுக்கு படிப் பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும் தூய்மையான பாலை உங்களுக்கு புகட்டுகிறோம். அருந்து வோருக்கு அது இனிமையானது.
இத்திருமறை வசனத்தில் கால்நடை களை நன்றாக அவதானிக்குமாறு இறை வன் கூறுகிறான். அதனுடைய வயிறுகளில் இருந்து மிகச் சுத்தமான பால் உற்பத்தி யாகிறது எனக் கூறுகிறான். வெறுமனே வயிறு களில் இருந்து அப்பால் உற்பத்தி யாகின்றது என்று சொல்லியிருந்தால் அவ்வசனத்தில் எந்த அற்புதத்தையும் காண முடியாது. எங்கள் கண்களுக்கு புலப்படாத முறையில் மிக நுட்பமான துறை யில் உருவாக்கப்படுகின்ற பால் எப்பொரு ளால் உருவாக்கப்படுகின்றது என்பதை தெளிவாகவே சொல்லிக் காட்டுவதுதான் அதிசயம்.
இரத்தம்தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தார்கள். இரத்தத்திற்கும் செறிக்கப்பட்ட உணவுக்கும் மத்தியில் இருந்துதான் பால் உற்பத்தியாகின்றது என்று இறைவன் சொல்கிறான். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் எவரும் சொல் லாத, எவராலும் சொல்ல முடியாத இறைவ னுக்கு மாத்திரம்தான் சொல்ல முடியுமான அதிசயத்தக்க வார்த்தைதான் இது. ஏனெ னில், இன்றைய விஞ்ஞானிகள் பால் உற் பத்தி சம்பந்தமாக மிகத் தெளிவாகவே விளக்குகிறார்கள்.
சிறுகுடலில் இருந்து செறிக்கப்பட்ட உணவு இரத்தத்துடன் கலந்து மடுக்களை நோக்கி பயணித்து அந்த மடுக்களுடாக பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு தாய்க்கு உற்பத்தியாகும் பாலை பொறுத்த மட்டில், குழந்தையை பெற்றெடுத்தவுடன் ஒரு வகையான ஹோர்மோன் உற்பத்தி யாக்கப்படுகிறது. அந்த ஹோர்மோன் இரத்தத்தினூடாக மடுக்களை சந்திக்கும் நேரத்தில்தான் பால் உற்பத்தியாகின்றது. பெண்களுக்கு எல்லா காலப் பகுதிகளிலும் பால் உற்பத்தியாகாமல் இருப்பதற்குக் கார ணம் இந்த ஹோர்மோன் உற்பத்தியாகாமையே.
மேற்குறிப்பிட்ட வசனத்தை ஆழமாக பார்க்கையில் செறிக்கப்பட்ட உணவுக்கும் இரத்தத்திற்கும் மத்தியில் இருந்து தூய்மை யான பால் உற்பத்தியாகின்றது என்பதை இப்படி விளக்கலாம். அதாவது 5 நபர்கள் ஒரு இடத்தில் இருக்கும் நேரத்தில் அவர் களுக்கு மத்தியில் இருவர் தேர்ந்தெடுக் கப்பட்டார் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வோமோ, அதேபோன்று இரத்தத் திற்கும் செறிக்கப்பட்ட உணவுக்கும் மத்தி யில் இருந்து பால் உற்பத்தியாகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதன் அர்த்தம் என்னவெனில், ஒட்டுமொத்த இரத்தமும் பாலாக மாறாது. செறிக்கப்பட்ட முழு உணவும் பாலாக மாறாது. இரத்தத் தில் உள்ள ஹோர்மோன் மற்றும் செறிக் கப்பட்ட உணவில் ஒரு பகுதியும் மடுக்களில் ஒன்று சேர்கையில்தான் பால் உற்பத்தியா கின்றது.
அவ்வுண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் ஆய்வு செய்யாமல் யாராலும் சொல்ல முடியாது. சொல்வதாக இருந் தால் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓர் ஆய்வுகூடம் நடத்தி ஏராளமான பரிசோதனைகள் செய்து திருக்குர்ஆனை வெளியிட்டிருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டும். இக்கூற்றை யாராவது ஏற்றுக் கொள்வார் களா? என்றால் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தக் காலத்தில் இது போன்ற எந்த மருத்துவ உபகரணங்களும் இருக்கவில்லை. ஆய்வு கூடங்களும் இருக்க வில்லை. அப்படியென்றால் அகிலத்தை படைத்து அத்தனை அறிந்த இறைவனால் மாத்திரம்தான் இவ்வகையான வியக்கத் தக்க உண்மையை சொல்ல முடியும்.
இதில் மற்ற அதிசயம் என்னவென்றால், இறைவன் நமக்கு உணவளிப்பதாக பல இடங்களில் சொல்லிக் காட்டுகிறான். அதை உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வ தற்கு குழந்தையை பெற்றெடுத்தவுடன் தாய்க்குள் உருவாகும் அற்புத பானமாகிய தாய்ப் பாலை எடுத்துக் காட்டலாம்.
ஒரு சிசு இந்த பூமியில் பிறந்தவுடன் அழுதுகொண்டிருக்கும் வேளையில் அந்த சிசுக்காக இறைவன் உணவளிக்கிறான். எப்படியென்றால், இதுவரை காலமாக உணவு உண்ட பெண், தான் உணவு கொடுக்கும் பெண்ணாக ஒரு நொடிப் பொழுதிலேயே மாறுகிறாள். அந்தப் பெண் ணுக்குள் இந்த உணவை தயாரித்தவன் யார்? அந்தப் பால் குழந்தைகளை பெற்றெ டுக்காத காலத்தில் வருமானால் பெண்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள். ரஹ்மான் தன்னுடைய அருளினால் இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைக்கு இவ் வாறுதான் உணவளிக்கிறான்.
வானம் தருகின்றதா? திருப்பித் தருகின்றா?
1. திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக என்ற குர்ஆன் வசனத்தின் இலக்கத்தையும் அத்தியாயத்தின் இலக்கத்தையும் குறிப்பிடுக
2. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் என்ன?
http://www.jaffnamuslim.com/2013/07/2013_5711.html
http://www.jaffnamuslim.com/2013/07/2013_5711.html
Post a Comment