சிரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - 29 பேர் துடிதுடித்து மரணம்
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போரில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் துருக்கி, லெபனான் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அலெப்போ நகர் அருகே சிரியாவுக்கும், ஈராக்குக்கும் இடையேயுள்ள பாப் நைராப் பகுதியில் உள்ள போராளி முகாம்களை அழிக்க சிரியா விமானப்படை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது.
அந்த ஏவுகணை குறிதவறி குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இந்த மோசமான தாக்குதலில் 19 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 29 பேர் துடிதுடித்து பலியாகினர்.
'என் ஒட்டுமொத்த குடும்பமும் பலியாகிவிட்டது' என ஒரு சிறுவன் கூறும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி வருவது மனதை பதறவைக்கும் விதமாக அமைந்துள்ளது.
Ya Allah, Put an end mark to Asath's barbarian act.
ReplyDeleteYa allah put and mark to Saudi,America,Israel,Kuwait,UAE,Bahrain barbarian acts.
ReplyDelete