பாசிசப் புலிகளினால் ஷஹீதாக்கப்பட்ட சுஹதாக்களின் 23வது நினைவுதினம்
(vk;.v];.vk;. ]g;wh];)
1990ம் ஆண்டு ஏறாவூரில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டு ஸஹீதாக்கப்பட்ட சுஹதாக்களின் 23வது நினைவுதினம் ஏதிர்வரும் 12.08.2013 அன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு ஏறாவூர் நகர சபையின் நகர முதல்வர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் வழிகாட்டலில் இன்று (25.07.2013) ஏறாவூர் மஸ்ஜிதுல் நூறுஸலாம் பள்ளிவாயலில் அமைந்துள்ள சுகதக்கள் பூங்காவில் சிரமதான பணிகள் ஏறாவூர் நகர சபையின் சுகாதார மற்றும் வேலைப்பகுதி ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர சபை பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகது.
பூங்காவில் பரவிக்கிடந்த பற்றைககள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டு பூங்கா மண்னிட்டு நிறப்பப்பட்டது. இம்மண் தனவந்தர் ஒருவரால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிரதான வீதியில் உள்ள சுஹதாக்கள் நினைவுத்தூபியும் விரைவில் வர்ணம் பூசப்பட்டு புணரமைக்கப்படவுள்ளதாகவும் பிரதி நகர முதல்வர் தஸ்லீம் தெரிவித்தார்.
1990ம் ஆண்டு திட்டமிடப்பட்ட முறையில் செய்யப்பட்ட இவ்வினச்சுத்திகரிப்பில் 121 முஸ்லிம் சகோதர சகோதரிகள், சிறுவர்களும் சுட்டும், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதவேளை அன்று கர்ப்பிணி தாய் ஒருவரின் வயிற்றில் இருந்த குழந்தை கூரிய ஆயுதத்தினால் வயிற்றிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டமை எல்லோருடைய மனதையும் இன்னும் நெகிழச்செய்த கொண்டிருருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய பயங்கரவாத சுழ்நிலையில் இன்றைய நகர முதல்வர் அலி ஸாஹிர் மௌலானாவால் அன்றிருந்த பாதுகாப்பமைச்சர் ரஜ்ஜன் விஜயரத்ன வரவழைக்கப்பட்டு ஏறாவூரிப் பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment