மனைவிக்கான செலவுகள் எதுவரை செய்ய வேண்டும்? - ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 20)
யாரோ பெற்றெடுத்த பெண்ணை அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டு மனைவியராக்குவதாலோ, அவர்களுடன் இன்பம் அனுபவிப்பதாலோ மாத்திரம் மனைவியர் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. மனைவியர் பொறுப்பு என்பது பாரிய பொறுப்பாகும். இதைப் பற்றியும் மறுமையில் விசாரணை செய்யப்படுவோம் என்ற உணர்வும், அச்சமும் நம்மில் மேலிட வேண்டும். அப்போதுதான் நமது மனைவியர் விடயத்திலும் நாம் கவனமாக நடந்து கொள்வோம் இஸ்லாம் அவர்களுக்காக காட்டி இருககும் வழிமுறைகள் பற்றிச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
செலவு செய்வதன் சிறப்பு
குடும்பத்திற்காக கணவன் செலவு செய்து அவர்களைக் காப்பாற்றுவது கடமையாகும். இளைஞர் சமுதாயமே! உங்களில் யார் திருமண சக்தியைப் பெற்றாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) திருமணத்திற்குரிய செலவுகள், வாழ்வாதார வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு வாசகத்தைப் பயன்படுத்தியே நபி (ந) அவர்கள் அந்தச் செய்தியில் ஷபாஆ என்ற செறிவான சொல்லைப் பயன்படுத்திக் கூறியுள்ளதைக் கவனித்தால் மனைவி யருக்கான செலவீனத்தில் இஸ்லாம் காட் டும் கரிசனையைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு முஸ்லிம் தனது குடுத்பத்திற்காகச் செய்யும் செலவை அல்லாஹ்வுக்காக செய்கின்றபோது அது அவருக்கு தர்மமாக ஆகும் என நபிந அவர்கள் கூறினார்கள். (புகாரி).
ஒரு கணவன் தனது மனைவியருக்குச் செலவு செய்யும் விஷயத்தில் உலோபித் தனத்துடன் நடந்து கொள்கின்ற போது அவள் அவனது பணத்தில் இருந்து அவன் அறியாத விதமாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அது திருட்டல்ல என்ற சட்டத்தையும் குறிப்பிடுகிறது. இவ்வளவு பெறுப்பு மிக்க ஒரு காரியத்தில் பொறுப்பற்வர்களாக நடந்து கொள்ளும் முஸ்லிம்கள், குடும்பத் தலைவர்கள் இதில் மிக்க நிதானத்துடன் செயற்பட வேண்டும்.
விரலுக்கேற்ற வீக்கம்
ஒருவனுக்கு மனைவியாக வந்துவிட்ட பெண் அவனிடம் அவள் விரும்பியதை எல்லாம் கேட்கலாம் என மார்க்கம் கூற வில்லை. மாற்றமாக அவனது விருப்பத்தி லும், அவனது பொறுப்பிலும், அவனது வசதி யைக் கருத்திற் கொண்டும் அதை திட்ட மிட்டுள்ளது.
لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آَتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آَتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا ஜالطلاقஃ 7ஸ
வசதி உள்ளவர் அவரது வசதியில் இருந்து செலவு செய்யட்டும். யாருக்கு அவரது வாழ்வாதராம் (அல்லாஹ்வால்) சுருக்கப்பட்டுவிட்டதோ அவர் அவருக்கு அல்லாஹ் வழங்கியவற்றில் இருந்து செலவு செய்யட்டும். எந்த ஒரு ஆத்மாவையும் அதற்கு வழங்கியதற்குட்பட்டே அன்றி அல் லாஹ் கஷ்டப்படுத்தமாட்டான். கஷ்டத்தின் (வறுமையின்) பின் அல்லாஹ் இலகுவை (செல்வத்தை) ஏற்படுத்துவான் (அத்தலாக்: வசனம்:07).
மேற்படி வசனம் கணவன்மாரை வறிய, மற்றும் செல்வந்த வர்க்கம் என இரு வர்க்கமாக பிரித்து நோக்குவதை அறிய முடிகின்றது. நகை, நட்டு வேண்டும், காலுக்கு கொலுசு வேண்டும், லிப்டிக் டப்பாவேண்டும், குதி உயர்ந்த சப்பாத்து வேண்டும், நானும் மற்றப் பெண்ணைப் போல் டாம்பீகமாக வாழவேண்டும், காரில் போகவேண்டும் போன்ற எண்ண அலை களுடன் வறியவர் மனைவி செலவந்தர் மனைவி போல வாழ நினைத்தால் கணவன், மனைவி என்ற படகின் பயண ஒழுங்கு இடை நடுவில் தலைகீழாகக் கூடும். இது பல குடும்பங்களின் பிரிவுகளுக்கு காரணமா கவும் அமைந்திருப்பதை இன்று நிதர்சனமாகக் காண்கின்றோம். இந்த விஷயத்தில் பெண்கள் மிக அவதானமாகவும், பொறுப்பு ணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும்.
அலங்கார, அணிகல்களின் ஆசை பெண்களிடம் அதிகம் காணப்படுவதை நாம் அறிவோம். நபி (ந) அவர்களின் மனைவியர் கூட இந்த ஆசைக்கு ஆட்பட்டார்கள். நபி (ந)அவர்களை அவர்களை அல்லாஹ் விடம் இருக்கும் வெகுமதிவாய்ந்த கூலி களைக் கூறி ஆறுதல்படுத்தினார்கள் என் றால் நமது பெண்களைக் கேட்டகவா வேண்டும். பெண்களும் இந்த விடயத்தில் மற்றப் பெண்களைப் போல் வாழவேண்டும் என்ற நிலையில் இருந்து தம்மை பக்கு வப்படுத்திக் கொள்வதால்தான் இது நூறு விகிதம் சாத்தியமாகும்.
பிள்ளைக்குப் பாலுட்டியதற்கான செலவு
தனது மனைவியின் கருவறையில் வளர்வது தனது வாரிசு என்ற உணர்வின்றி வாழும் ஆண்மிருகங்கள் எத்தனை! எத்தனை! அல்லாஹ் ஹராமாக்கிய சிக்கரட் குடிப்பான், பீடி அடிப்பான், சாராயம், அபின், போதைவஸ்து அனைத்தும் பாவிப்பான். ஆனால் தனது மனைவயின் கரு வறையில் வளர்கின்ற தன்னுடைய குழந்தையின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தாகக் காணப்படும் தாய்பால் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டான்.
கணவன் மனைவியாகி இருவரும் சம இன்பம் அனுபவித்த போதிலும் குழந்தைக்கு மனைவி பாலூட்டுவதற்கான செலவீனம் கணவனைச் சார்ந்தது என இஸ்லாம் கூறுகின்றது. கருவறை காலத்தில் தனது இரத்தத்தை பாலாக ஊட்டிய பெண்ணை மென் மேலும் கஷ்டப்படுத்தி, அவளது உடலின் சக்தி தொடர்ந்தும் வீணடிக்கப்படுவதால் குழந்தை பிறந்த பின் பாலூட்டுவதற்கான செலவை கணவன் பொறுப்பேற்க வேண்டும் என மார்க்கம் பணிக்கின்றது.
(தாய்மார்களான) அவர்கள் உங்களுக்காக பாலூட்டினால் அவர்கள் அவர்களது கூலியை அவர்களுக்கு வழங்கி விடுங் கள், உங்கள் மத்தியில் நன்மை யைக் கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்முடையோராக இருந்தால் வேறொரு பெண் அதற்காக (குழந்தைக்காக) பாலூட்டுவாள். (அத்த லாக். வச: 06)
மற்றொரு வசனம் இக்கால எல்லை இருவருடங்கள் என நிர்ணயம் செய்துள்ள தைப் பார்க்கின்றோம். தாய்மார் தமது குழந் தைகளுக்காக பூரணமாக இருவருடங்கள் பாலூட்டுவர். (அல்பகரா: வச: 323). என்ற செவிலித் தாய்க்கும் செலவு கொடுக்க வேண்டும். தனது மனைவியிடம் பிள்ளைக்கான போதுமான பால் இல்லாத போது. அல்லது அவளால் பாலூட்;ட முடியாத ஒரு நிலை ஏற்படுகின்றபோது, அல்லது அவள் மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஆளாகின்ற போது மற்றொரு தாயிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில் பாலூட்டிய தனது மனைவிக்காக செலவு வழங்குவதைப் போன்று தனது குழந்தைக்குப் பாலூட்டும் இன் னொரு தாயின் கூலியை இவர் பொறுப் பேற்க வேண்டும் என மார்க்கம் பணிக்கின்றது.
தலாக் விடப்பட்ட பெண்ணின் செலவு
கணவன் மனைவி வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகின்றபோது பிள்ளைகள் பாதிக்கப் படக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கவனமாக இருக்கின்றது. அந்த வகையில் தலாக் ரஜயி (கணவனிடம் மீள முடியுமான ஒரு அல்லது இரு தாலக்) விடப்பட்ட மனைவியருக்கான செலவு கணவனைச் சார்ந்ததாகும். இதனை உதாசீனப்படுத்தும் பலர் முஸ்லிம்கள் வட்டத்தில் காணப்படு கின்றனர். அந்தப் பெண் கர்பமுடையவ ளாக இருந்தால் அதன் கடமை மிகமிக வலியுறுத்திக் கூறப்பட்ட விடயமாகும்.
أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ وَإِنْ كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآَتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى (الطلاق :- 6)
உங்கள் வசதிக்குரியவாறு அவர்களை குடியமர்த்துங்கள் அவர்களுக்கு நெருக்கடி யைக் கொடுப்பதற்காக நீங்கள் அவர்க ளுக்கு தீங்கு செய்ய வேண்டாம். அவர்கள் கர்ப்பமானவர்களாக இருந்தால் அவர்கள் தங்களது குழந்தையை பிரசவிக்கும் வரை அவர்கள் உங்களுக்காக பாலூட்டினால் அவர்களது கூலியை அவர்களுக்கு வழங்கி விடுங்கள், உங்கள் மத்தியில் நன்மையைக் கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்டமுடையோராக இருந்தால் வேறொரு பெண் அதற்காக (குழந்தைக்காக) பாலூட் டுவாள். (அத்தலாக் :06) என்ற அல்லாஹ் வின் கட்டளை ஒன்று, அல்லது இரண்டு தலாக் சொல்லப்பட்ட பெண்களின் செல வீனம் பற்றிப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.
தலாக் விடப்பட்ட இந்தப் பெண்கள் கர்புடையோராக இருப்பின் அவர்களுக்கு செலவு செய்வது கட்டாயம் என்பதை மேற் படி வசனத்தின் மூலம் தெளிவாகின்றது. மனைவி கர்ப்பிணியாக இல்லாதிருந்தால் ஷஉங்கள் மத்தியில் நீங்கள் நன்மையைக் கடைப்பிடியுங்கள்| என்ற வகையில் ஒரு கணவன் அந்தப் பெண்ணுக்கு முடியுமான உதவிகளைச் செய்வதில் தவறில்லை என்றே கூறவேண்டும்.
இக்காலப்பகுதியில் மனைவி இத்தாவில் இருப்பதற்கான ஏற்பாடுகளைக் கூட கணவனே செய்து தரவேண்டும்.
மூன்று தலாக் விடப்பட்டவளுக்கு செலவு கொடுக்க வேண்டுமா?
ஷபாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்களை அவர்களின் கணவர் ஷஅபூ அம்ரு பின் ஹப்ஸ் என்பவர் ஊரில் இல்லாதிருந்தும் (பொறுப்பாளார் ஒருவர் மூலம்) இறுதித் தலாக் கொடுத்திருந்தார். அந்தப் பொறுப் பாளர் அவளிடம் தொலிக் கோதுமையை அனுப்பி வைத்தார். இதனால் ஆக்ரோஷப் பட்ட அப்பெண் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து (தனது கணவர் செலவுக்கு எதை யும் ஏற்பாடு செய்யாது தலாக் கொடுத்த) விபரத்தை முறையிட்டார். உனக்கு அவர் செலவிற்காக எதையும் தரவேண்டிய அவசி யம் இல்லை. நீ ஷஉம்மு ஷுரைக்| கின் வீட்டில் இத்தா கடமையில் இரு, எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பில் எனது கணவர் என்னை மூன்றாவது தலாக் விட்டதும் என்னை இத்தாவில் இருக்கும்படி பணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு குடியிருப்பு வசதியையோ, அல்லது செலவீனத்தையோ ஏற்படுத்தித் தரவில்லை. என பாத்திமா (ரழி) அவர்களே குறிப்பிடுவதில் இருந்தும் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சுருக்க மாகக் கூறினால் வாழ்க்கையே அறுந்து விட்டதாம்.
முழுமையாக தலாக் பெற்றவளுக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் கணவ னுக்கு இல்லை என இஸ்லாம் குறிப்பிடு கின்றது. ஒரு பெண் வீணாக நடுத்தெரு வில் விடப்படுகிறாளே அநாதரவான நிலை யில் விடப்படுகிறாளே என்றெல்லாம் கூறி பெண்ணியம் பேசுவோர் அவளது இரு தலாக் காலத்தில் கணவனுடன் இணைத்து வைக்கப் பாடுபட்டார்களா? அல்லது பாடு படுகிறார்களா? செலவுகளை பெற்றுக் கொடுக்க முற்படுகிறார்களா? என்று பெண் ணியம் பேசுவோர் சிந்திக்க வேண்டும்.
கேள்விகள் 20
கேள்வி – 1 தனது குடும்கத்கிற்காக செலவு செய்தால் அவருக்கு கிடைக்கும் நன்மை எது?
கேள்வி – 2 தாய்மார்கள் எத்தனை வருடங்கள் தங்களது பிள்ளைகளுக்கு பாலூட்ட வேண்டும்?
Post a Comment