Header Ads

2013 ஹஜ் யாத்திரையை MERS தொற்று பாதிக்குமா?

(UMAR ALI MOHAMED ISMAIL)

                                                       இன்று மருத்துவ உலகிலே ஒரு அபாய எச்சரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது .ஆம் 2012 ஆம் ஆண்டிலிருந்து சவூதி அரேபியாவை நடுங்க வைத்துக்கொண்டிருக்கும்  மத்திய கிழக்கிற்கான சுவாசத்தொற்று நோய் -MIDDLE  EAST RESPIRATORY SYNDROME  மூலமாக  இதுவரை உலகில் மொத்தமாக 84 பேர் இந்நோயால் பாதிக்கப்படிருக்கின்றார்கள், அவர்களில் 68 பேர் சவூதியைச்சேர்ந்தவர்கள் , ஏனயவர்களில் அநேகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தவர்கள் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன .

        இன்றுவரை உலகில் MERS இனால் ஏற்பட்ட 45 மரணங்களில் 38 மரணங்கள்  சவூதியில்  ஏற்பட்டிருக்கின்றன.55 விகிதம் இறப்பு வீதத்தை கொண்டிருக்கும் நோய் பற்றி நிபுணர்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே உள்ளனர்.

2003 ஆம் ஆண்டு ஆசியாவிலே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 8273 பேரை தாக்கி அதில் 9 விகிதமனவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த SARS  வைரஸ் இனை  ஒத்த  ஒரு வைரசாலேயே  MERS  தொற்று ஏற்படுகின்றது.இதனை ஏற்படுத்தும் வைரஸ்   MERS  -CoV  என இனங்காணப்பட்டுள்ளது.

                        SARS  இனைப்போன்று  மிருகங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்ற MERS  சாதாரண தடிமல் போல குணம்  குறிகளைக்கொண்டிருந்தாலும் இறுதியில் மனித சிறுநீரகத்தை தாக்குவதால் SARS இலிருந்து வேறுபடுத்தி இனம் காணப்பட்டுள்ளது.குறித்த கோரோனோ வைரஸ்தொற்று ஏற்பட்டவர்கள் இருமல்,காய்ச்சல்,சுவாசிப்பதில் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் அத்துடன் மூச்சுத்திணறலும் ஏற்படும்.

உலகெங்கிலும் இருந்து எதிர்வரும் அக்டோபர் மாதம் புனித மக்காவில்  ஹஜ் யார்த்திரைக்காக லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் வர இருக்கும் காலகட்டத்தில்  இந்நோய்  உலகு முழுவதும் காவிச்செல்லப்படுவதற்க்கான  வாய்ப்புகள் இருப்பது குறித்து சவூதி ,மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளைச்சேர்ந்த அதிகாரிகளுடன் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர தொற்று நோய்களுக்கான அமைப்பினைச்சேர்ந்த  நிபுணர்கள் அவசர மாக  தொலைபேசி  மகாநாட்டை நடாத்தியுள்ளனர் ,கடந்த செவ்வாயும்,புதனும் இரு சுற்றுக்களாக  குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

                       இதன்போது சருவதேச ரீதியாக சவூதி அரேபியாவுக்கான பயணத்தில் தடைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை எனவும் ,நோய்க்குரிய  குறித்த குணங்குறிகள் உடயவர்களையிட்டு  மிகவும் அவதானமாகவும் கண்காணிப்புடனும் இருக்குமாறு வேண்டிக்கொள்வதுடன்  தொற்றினைத்தடுப்பதற்க்கான  ஆகக் கூடிய நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்ற MERS  சாதாரண தடிமல் போல குணம்  குறிகளைக்கொண்டிருந்தாலும் இறுதியில் மனித சிறுநீரகத்தை தாக்குவதால் SARS இலிருந்து வேறுபடுத்தி இனம் காணப்பட்டுள்ளது.குறித்த கோரோனோ வைரஸ்தொற்று ஏற்பட்டவர்கள் இருமல்,காய்ச்சல்,சுவாசிப்பதில் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் அத்துடன் மூச்சுத்திணறலும் ஏற்படும்.

உலகெங்கிலும் இருந்து எதிர்வரும் அக்டோபர் மாதம் புனித மக்காவில்  ஹஜ் யார்த்திரைக்காக லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் வர இருக்கும் காலகட்டத்தில்  இந்நோய்  உலகு முழுவதும் காவிச்செல்லப்படுவதற்க்கான  வாய்ப்புகள் இருப்பது குறித்து சவூதி ,மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளைச்சேர்ந்த அதிகாரிகளுடன் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர தொற்று நோய்களுக்கான அமைப்பினைச்சேர்ந்த  நிபுணர்கள் அவசர மாக  தொலைபேசி  மகாநாட்டை நடாத்தியுள்ளனர் ,கடந்த செவ்வாயும்,புதனும் இரு சுற்றுக்களாக  குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

                       இதன்போது சருவதேச ரீதியாக சவூதி அரேபியாவுக்கான பயணத்தில் தடைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை எனவும் ,நோய்க்குரிய  குறித்த குணங்குறிகள் உடயவர்களையிட்டு  மிகவும் அவதானமாகவும் கண்காணிப்புடனும் இருக்குமாறு வேண்டிக்கொள்வதுடன்  தொற்றினைத்தடுப்பதற்க்கான  ஆகக் கூடிய நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

            இதனைத்தொடர்ந்து  கடந்த சனிகிழமை சவூதி சுகாதாரத்துறையானது     தமது மக்களுக்கு இம்முறை ஹஜ் யாத்திரையில் சிறுவர்கள்,வயோதிபர்கள்,நாட்பட்ட  தீராத நோயுள்ளவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் போன்ற முஸ்லீம் யாத்திரிகர்களை     கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

                ஹஜ் யாத்திரையின்போது கிரிகைகளை நிறைவேற்றும் இடங்களில் மிகவும் நெருக்கமாக  யாத்திரிகர்கள்  இருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.நெருங்கிய தொடர்பு மூலம் (CLOSE  CONTACT )ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு  இந்நோய் பரவக்கூடியது என்பது  குறிப்பிடத்தக்கது.மட்டுமன்றி  ஹஜ் யாத்திரையின் கடமைகளின் பொது போதியளவு ஓய்வும் உறக்கமும்  இல்லாமையும்,சன நெருக்கடியான சூழலும் இந்த நோய் தொற்றிக்கொள்ள இலகுவாக வழிவகுக்கலாம். 

No comments

Powered by Blogger.