Header Ads



பல்கலைக்கழக 2012/2013 ஆம் கல்வியாண்டுக்கு 23125 மாணவர்கள் அனுமதி

(ஏ.எல்.ஜுனைதீன் ) 

    இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களின் பட்டப் பயில் நெறிகளுக்கு 2012 / 2013 ஆம் கல்வியாண்டில் 23125 மாணவர்களை அனுமதிப்பதற்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தேசித்திருக்கிறது.

    நாட்டிலுள்ள 14 தேசியப் பல்கலைக் கழகங்கள் 03 வளாகங்கள் மற்றும் 05 நிறுவகங்கள் ஆகியவற்றில் இம் மாணவர்கள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.

    கொழும்பு பல்கலைக் கழகத்தில் 1955 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 2425 மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் 2660 மாணவர்களும் களனிப் பல்கலைக் கழகத்தில் 2020 மாணவர்களும், மொறட்டுவப் பல்கலைக் கழகத்தில் 1525 மாணவர்களும், 

    யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் 1755 மாணவர்களும், உறுகுணைப் பல்கலைக் கழகத்தில் 1880 மாணவர்களும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 1110 மாணவர்களும், தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்  1350 மாணவர்களும், சபரகமுவப் பல்கலைக் கழகத்தில் 1000 மாணவர்களும், ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் 1270 மாணவர்களும், வயம்ப பல்கலைக் கழகத்தில் 840 மாணவர்களும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில் 605 மாணவர்களும், கட்புல, அரங்கேற்றக்கலைகள் பல்கலைக் கழகத்தில் 550 மாணவர்களும், ஸ்ரீபாளி வளாகத்தில் 150 மாணவர்களும், திருக்கோணமலை வளாகத்தில் 120 மாணவர்களும், வவுனியா வளாகத்தில் 275 மாணவர்களும், சுதேச மருத்துவ நிருவகத்தில் 200 மாணவர்களும், கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தில் 120 மாணவர்களும், கொழும்பு பல்கலைக் கழக கணனிக் கல்லூரியில் 240 மாணவர்களும், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 230 மாணவர்களும், இராமநாதன் நுண்கலைக் கழகத்திற்கு 195 மாணவர்களும், மேலதிக் உள்ளெடுப்பாக 650 மாணவர்களும் என புதிய கல்வியாண்டில் மாணவர்கள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.

    இவ்வாறு அனுமதிக்கென உத்தேசிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் மருத்துவத் துறைக்கு 1220 மாணவர்களும், பல் அறுவைச் சிகிச்சைக்கு 80 மாணவர்களும், விலங்கு மருத்துவ விஞ்ஞானத்திற்கு 100 மாணவர்களும், விவசாய தொழில் நுட்பமும் முகாமைத்துவத்திற்கு 200 மாணவர்களும், விவசாயத்திற்கு 530 மாணவர்களும், விவசாய வள முகாமைத்துவமும் தொழில்நுட்பத்திற்கு 150 மாணவர்களும், உணவு விஞ்ஞானமும் போசாக்கும் 110 மாணவர்களும், உணவு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் 95 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்திற்கு 1255 மாணவர்களும், ஆயுர்வேதற்கு 270 மாணவர்களும்,யுனானிக்கு 50 மாணவர்களும், சித்த மருத்துவத்திற்கு 70 மாணவர்களும், பிரயோக விஞ்ஞானங்கள் (உயிரியல் விஞ்ஞானம்) 185 மாணவர்கள், சுகாதார விருத்தி 50 மாணவர்கள், இயந்திரவியல் 1470 மாணவர்கள், இயந்திரவியல்(EM) 50 மாணவர்கள், இயந்திரவியல் (TM) 50 மாணவர்கள்,  கட்டடக்கலை 55 மாணவர்கள், வடிவமைப்பு (கட்டடக்கலை) 50 மாணவர்கள், 

    நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி  அபிவிருத்தியும் 40 மாணவர்கள், கணனி விஞ்ஞானம் 260 மாணவர்கள், தகவல் தொழில் நுட்பம் 200 மாணவர்கள், முகாமைத்துவமும் தகவல் தொழில் நுட்பமும் 50 மாணவர்கள், தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் 150 மாணவர்கள், தகவல் முறைமைகள் 80 மாணவர்கள்,  பட்டினமும் நாடும் திட்டமிடல் 50 மாணவர்கள், பெளதிக விஞ்ஞானம் 1805 மாணவர்கள்,  கணிய அளவையியல் 100 மாணவர்கள்,  அளவையியல் விஞ்ஞானம் 60 மாணவர்கள், பிரயோக விஞ்ஞானங்கள் (பெளதிக விஞ்ஞானம்) 385 மாணவர்கள், முகாமைத்துவம் 3525 மாணவர்கள், பொது முகாமைத்துவம்(சிறப்பு) 75 மாணவர்கள், தொடர்பாடல் கற்கைகள் 50 மாணவர்கள், சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் 60 மாணவர்கள்,  முகாமைத்துவக் கற்கைகள் ( TV ) 150 மாணவர்கள், 

    வணிகவியல் 530 மாணவர்கள், கலை (மேலதிக அனுமதி உட்பட) 5025 மாணவர்கள், கலை (SP) 15 மாணவர்கள், கலை (SAB) 200 மாணவர்கள், சட்டம் 350 மாணவர்கள், சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் 35 மாணவர்கள், தாதியியல் 205 மாணவர்கள், மருந்தகவியல் 105 மாணவர்கள், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள் 100 மாணவர்கள், ஊடுகதிர்ப்படமெடுப்பு 35 மாணவர்கள், இயன் மருத்துவம் 60 மாணவர்கள், சூழல் பேணலும் முகாமைத்துவமும் 50 மாணவர்கள், வசதிகள் முகாமைத்துவம் 50 மாணவர்கள்,  போக்குவரத்தும் தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமை 50 மாணவர்கள், மூலக்கூற்று உயிரியலும் உயிரிரசாயனவியலும் 60 மாணவர்கள், கைத்தொழில் புள்ளி விபரவியலும் கணிதவியல் நிதியும் 90 மாணவர்கள், புள்ளி விபரவியலும் செயற்பாட்டு ஆராய்ச்சியும் 50 மாணவர்கள், கணக்கிடலும் முகாமைத்துவமும் 50 மாணவர்கள்,  மீன் பிடித்தலும் கடல்சார் விஞ்ஞானங்களும்  60 மாணவர்கள், இஸ்லாமியக் கற்கைகள் 200 மாணவர்கள், அரபு மொழி 150 மாணவர்கள், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 55 மாணவர்கள், கணனி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 55 மாணவர்கள், தொழில் முயற்சியும் முகாமைத்துவமும் 55 மாணவர்கள்,

    விலங்கு விஞ்ஞானம் 55 மாணவர்கள், ஏற்றுமதி விவசாயம் 55 மாணவர்கள், சங்கீதம் 375 மாணவர்கள், நடனம் 334 மாணவர்கள்,  சித்திரமும் வடிவமைப்பும் 30 மாணவர்கள்,  நாடகமும் அரங்கமும் 86 மாணவர்கள்,  கட்புலக் கலை 100 மாணவர்கள், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் 50 மாணவர்கள்,  தேயிலை தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும் 55 மாணவர்கள், கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் 55 மாணவர்கள்,  கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும் 55 மாணவர்கள், வியாபாரத் தகவல் முறைமைகள் (சிறப்பு) 50 மாணவர்கள், முகமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL) 90 மாணவர்கள், கணக்கிடலும் தகவல் முறைமைகளும் 80 மாணவர்கள், உடற்றொழில் கல்வி 50 மாணவர்கள், விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் 80 மாணவர்கள், பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும் 50 மாணவர்கள், விலங்கு விஞ்ஞானமும் மீன் பிடித்தலும் 50 மாணவர்கள்,  நீர்வாழ் வளங்ககள் தொழில்நுட்பம் 55 மாணவர்கள், பனை இனத்தாவரம் மற்றும் இறப்பர் பால் தொழில்நுட்பமும் பெற்மதி சேர்ப்பும் 55 மாணவர்கள், விருந்தோம்பல்,சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம் 55 மாணவர்கள், உணவு உற்பத்தியும் தொழில்நுட்ப முகாமைத்துவமும் 60 மாணவர்கள், தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் 100 மாணவர்கள்,  சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும் 100 மாணவர்கள், விவசாய வியாபார முகாமைத்துவம் 50 மாணவர்கள், பசுமைத் தொழில்நுட்பம் 50 மாணவர்கள், நிலத்தோற்றக் கட்டடக்கலை 50 மாணவர்கள்.

No comments

Powered by Blogger.