Header Ads



2000 ரூபாய் திருட்டுபோனதால் ஆத்திரமடைந்தவர் முதியோர் இல்லத்திற்கு தீ வைத்து 11 பேர் மரணம்

பணம் திருடு போனதால் ஆத்திரத்தில் முதியோர் காப்பகத்தை நோயாளி ஒருவர் தீ வைத்து கொளுத்தினார். இதில் நோயாளி உள்பட முதியோர் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். சீனாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவின் ஹிலாங்ஜியாங் மாகாணம் ஹெய் லன் நகரத்தில் முதியோர் காப்பகம் உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில், 283 பேர் தங்கி இருந்தனர். இங்கு 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் 32 பேர் தங்கியிருந்தனர். இங்கு சீனாவை சேர்ந்த வாங் குய் (45) என்பவர் மூளையில் ஏற்பட்டுள்ள ரத்த கட்டு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் அவர் வைத்திருந்த 2000 ரூபாய் திருடு போனது. அவருடன் தங்கியிருந்த சக நோயாளி ஒருவர் பணத்தை திருடியதாக வாங் குய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. பணத்தை மீட்டு தரும்படி காப்பகத்தில் உள்ளவர்களிடம் வாங் தகராறு செய்தார். அவரை காப்பக ஊழியர்கள் சமாதானம் செய்தனர். எனினும் ஆத்திரம் தீராத வாங், காப்பகத்துக்கு நேற்று திடீரென தீ வைத்தார். இதில் 45 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். தீயில் சிக்கிய வாங் குய்யும் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.