முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 1)
(பகுதி 1)
அல் குர்ஆனின் (பமன் அள்லமு) 24 ஆவது ஜுஸ்இலிருந்து
1. இணை வைத்தலை விட்டும் நபியவர்களைத் தடுக்கும் வசனத்தை எழுதுக.
2. 'அல்லதீன' الَّذِينஎன்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு வசனத்தில் 'அல்லதைனி' الَّذَين என இடம்பெற்றுள்ளது. அவ்வசனத்தின் அத்தியாய வசன எண்களைக் குறிப்பிடுக.
3. விரோதியும் உற்ற நண்பனாக மாறுவதற்கான வழி என்ன, என்பதை வசன எண்ணுடன் குறிப்பிடுக.
4. வானங்களையும், பூமியையும் 6 நாட்களில் அல்லாஹ் படைத்ததாக அல்குர்ஆனின் பல இடங்களில் இறைவன் குறிப்பிட்டுள்ளான். 6 நாட்களிலும் படைக்கப்பட்டதை சற்று விபரமாகக் குறிப்பிடும் 3 வசனங்களினதும் எண்களைக் குறிப்பிடுக.
5. ஸுரா ஸுமர் 67ம் வசனத்தில் இடம்பெற்றிருக்கும் அல்லாஹ்வின் பண்பைக் குறிப்பிடுக.
6. எச்சந்தர்ப்பத்தில் ஈமான்கொள்ளல் பயனளிக்காது என்பதைக் குறிப்பிடுக.
7. அல்லாஹ்வின் 4 பண்புகள் தொடராக ஒரு வசனத்தில் இடம்பெற்றுள்ளன. அப்பண்புகள் யாவை?
8. 'லாஇலாஹ இல்லாஹூ' என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெற்றுள்ள ஸூரா எது? அவ்வார்த்தையின் கருத்தென்ன?
9. பிரார்த்தனை(துஆ) என்பது ஒரு தனிப்பட்ட வணக்கம் என்பதற்கான ஆதாரம் யாது?
10. 'ஹமீம்' என்ற பதத்திற்குரிய பொருள் யாது?
11. 'அர்ஷ்' என்ற பதம் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது?
12. குற்றவாளி மறுமையின் வேதனையை விட்டும் தன்னைக் காத்துக்கொள்ள எவற்றைப் பரிகாரமாகக் கொடுக்க முற்படுவான்?
13. பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கு எனவும் பிழையான கூற்றுக்கு x எனவும் அடையாளமிடுக:
1. சகல தூதர்களின் வரலாறுகளையும் நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்துள்ளான் ( )
2.மறுமை நாளின் சிபாரிசு நபிமார்களுக்கு மாத்திரம் சொந்தமானது. ( )
3.பிர்அவ்னுடைய குடும்பத்தில் ஆண்கள் எவரும் ஈமான்கொள்ளவில்லை. ( )
4. 'என்னுடைய சமூகத்தினரே! (ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளும்) மறுமை நளை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்' என மூஸா (அலை) அவர்கள் தம் சமூகத்தினரை நோக்கிக் கூறினார்கள். ( )
5. மூஸா (அலை) அவர்களது பெயர் இந்த ஜுஸ்உவில் 6 தடவைகள் இடம்பெற்றுள்ளன. ( ) (மொழிபெயர்ப்பிலல்ல)
தொடரும்..!
அணுசரனை:
அபிவிருத்தி மற்றும் பயிற்றுவிப்புக்கான உலக கலாச்சார நிலையம்
ஏற்பாடு:
தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்
அணுசரனை:
அபிவிருத்தி மற்றும் பயிற்றுவிப்புக்கான உலக கலாச்சார நிலையம்
ஏற்பாடு:
தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்
முஸாபகது ரமழான் போட்டி அறிமுகத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்க..!
Post a Comment