'வேதனை உணரும் நரம்புகள்' - றமழான் முத்துக்கள் (கேள்வி. 1)
அல்லாஹுதஆலா தன் திருமறையில் 'நமது வசனங்களை மறுப்போரை நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம்' என்று சூரத்துன் நிஸாவின் 56 ஆவது வசனத்தில் குறிப்பிடுகிறான்.
இங்கு தோல் கருகும்போது அதை மாற்றுவோம் என்று கூறாமல் 'வேதனையை உணர்வதற்காக தோல்களை மாற்றுவோம்' என்று கூறிக் காட்டுகிறானே, ஏன் இதை இப்படிச் சொல்கிறான்? என்பதை ஒரு கனம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹுதஆலா ஒரு வார்த்தையைக் கூட வீணுக்குப் பேச மாட்டான் என்று நம்பியிருக்கிறோம். வேதனையை உணர்வதற்காக என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படுவதிலிருந்தே நரகில் வேதனையை உணர்வதற்காகத்தான் அல்லாஹ் தோல்களை மாற்றுகிறான் என்று தெளிவாக விளங்குகிறது. அப்படியென்றால் வேதனையை உணர்வதற்கும் மனித தோலுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும் என்பதை சிந்திக்கும் எல்லா உள்ளங்களும் ஏற்றுக்கொள்ளும்.
ஏனெனில், எங்கள் இறைவா! இதை வீணாக நீ படைக்கவில்லை. நீ தூயவன். (3:191) என்ற ஒவ்வொரு விசுவாசிகளும் சொல்வார்கள் என குர்ஆன் சாட்சி கூறு கிறது. எனவே அந்தத் தொடர்பு என்ன? என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்குக் கட மைப்பட்டுள்ளோம்.
உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூளைக்கு மட்டும்தான் உள்ளது என்று ஆரம்ப காலத்தில் எண்ணினார்கள். ஆனாலும் அண்மைக்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் தோல் கரிந்து விட்டால் மனித மூளை எந்தவிதமான வேதனையையும் உணராது. வலி உள்வாங்கிகள் (Pain Receptors) தோலில் அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறான் என்று நிரூபித்துள்ளன. ஏனெனில், வேதனையை உணரக் கூடிய நரம்புகளை மனிதனின் தோலில்தான் அல் லாஹ் அமைத்துள்ளான். வலி உள்வாங்கி கள் (Pain Receptors) இல்லையெனில், உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.
இதனால்தான் மேல் தோலை மட்டும் மரக்கச் செய்யும் மருந்துகளை ஊசி மூலம் போட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்தால் மனிதன் மரணித்து விடுவான். அதேபோல் தீக் காயங்களுக்கு ஆளாகிய ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் வைத்தியர் அந்நோயாளியின் தீக்காயத்தின் அளவைக் கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கிறார். நோயாளி வலியை உணரும் பட்சத்தில் அவருடைய தோளின் வலி உள்வாங்கிகள் பழுதடையாமல் நல்ல நிலையில் உள்ளன என்பதை அறிகிறார்.
இதற்கு மாற்றமாக நோயாளி வலியை உணராமல் இருந்தால் தோளின் வலி உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள் ளன என்பதையும் அறிகிறார். அதேபோல் தீக்காயங்களில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் கண்டிருப்பீர்கள். இதற்குக் காரணம் அவர்களின் தோலில் அமைந்துள்ள வலி உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட் டுள்ளதாகும் என்பதை தற்போது புரிந்திருப்பீர்கள்.
படித்தவர்களும் படிக்காதவர்களும் ஒரே நேரத்தில் பாடம் நடத்துவதென்பது மனிதர்களால் சாத்தியப்படாத காரியம் என்பதை ஆரம்பத் தொடரிலேயே குறிப்பிட்டோம். ஆனால், அல்லாஹுதஆலா 5ஆம் நூற் றாண்டு மக்களுக்கும் 21ஆம் நூற்றாண்டு மக்களுக்கும் சேர்த்தே பாடம் நடத்து கிறான். இதனை இன்னும் இலகுபடுத்தி விளக்குவதென்றால் முதலாம் வகுப்பு மாண வனுக்கும் உயர்தர வகுப்பு மாணவனுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்துவதென்பது எந்தப் பேராசிரியருக்கும் முடியாத காரியமாகும்.
ஏனெனில், உயர்தர மாணவனுக்குப் புரியும் வகையில் பாடம் நடத்தினால் முத லாம் வகுப்பு மாணவனுக்குப் புரியாது. முதலாம் வகுப்பு மாணவனுக்குப் புரியும் வகையில் பாடம் நடத்தினால் உயர்தர மாணவன் எழுந்து போய்விடுவான்.
அப்படியிருக்க அல்லாஹுதஆலா வேதனையை உணர்வதற்காக தோல் களை மாற்றுவோம் என்று எளிய மொழி நடையில் 6 ஆம் நூற்றாண்டு மக்களையும் 21ஆம் நூற்றாண்டு மக்களையும் விழித்துப் பேசி நரகத்தை உண்மையே நம்ப வைக் கிறான். 6 ஆம் நூற்றாண்டு மக்களுக்குப் புரியும் வகையில் வேதனை உணர்வதற் காக தோல்களை மாற்றுவோம் என்று எளிய மொழிநடையில் விஞ்ஞான கருத்தை முன்வைக்கிறான். 6 ஆம் நூற்றாண்டு மக்கள் நரகில் தோல் மாற்றப்படும் என்று நம்புவார்கள். அவர்களுக்கு அதிலுள்ள விஞ்ஞான தத்துவம் புரிந்திருக்காது.
அதேபோல் 5ம் நூற்றாண்டு மக்களுக் குப் புரியும் வகையில் தோல்களை மாற்று வோம் என்று கூறியிருந்தால் 21ம் நூற் றாண்டு மக்கள் ஆர்வத்துடன் ஆய்வு செய்ய முன் வர மாட்டார்கள். அதுமட்டு மல்லாமல் அவர்களின் இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய அத்தாட்சிகளாகவும் இவை இருக்காது. 21ம் நூற்றாண்டு மக்கள் 'வேதனையை உணர்வதற்காக தோல்களை மாற்றுவோம்' என்ற வசனத் தைப் படித்தவுடன் ஏன் அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்? இதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா? என்று தேடிப் பார்ப் பார்கள். விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதனின் சிந்தனை இப்படித்தான் அமைந்திருக்கும்.
எனவேதான் 6ம் நூற்றாண்டு ஜாஹிலிய்யா கால மக்களுக்கு 21ம் நூற்றாண்டு விஞ்ஞான யுகத்தில் வாழும் மக்களுக்கும் ஒரே நேரத்தில் வல்லவன் அல்லாஹ் குர்ஆனில் பாடம் நடத்துகிறான். இதுதான் குர்ஆனின் அற்புதத் தன்மை.
இதனால்தான் இந்தக் குர்ஆன் அற்புதம். அற்புதம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறோம். ஆம், அல்குர்ஆன் வாழும் ஓர் அற்புதமென்றே நேர்மையாக சிந்திக்கும் உள்ளங்களின் நாவுகள் முழங்கும். எழுதப் படிக்கத் தெரியாக முஹம்மத் (ஸல்) அவர்களால் படித்த மக்களுக்கும் படிக்காத மக்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்த முடியுமா? எனவேதான் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷஎனக்கு வழங்கப்பட்ட அற்புதம் அல்குர்ஆன்| (புகாரி) என்றும் அல்குர்ஆன் இறைவனின் பேச்சு என்று அவர்கள் வாயினாலே சொன்னார்கள்.
அல்குர்ஆனில் புதைந்துள்ள விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிந்து அவற்றைப் படித்து விளங்கி இது இறைவனின் வேதம் என்பதை ஏற்றுக் கொண்டவர்களும் ஏராளம் ஏராளம் இருக்கிறார்கள். தாய்லாந்திலுள்ள சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் (Cheing Mai University) உடற்கூறு துறையின் (Department of Anotomy)) பேராசிரியர் தகாட்ட தெஜாஜன் (Prof. Tagatat Tegasen) என்பவர் தோலிலுள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நெடுங்காலமாக ஆய்வு மேற்கொண்டார்.
தோளிலுள்ள வலி உள்வாங்கிகள் காரணமாகவே மூளை வலியை உணர்கிறது என்பதை தனது ஆய்விலிருந்து அறிந்து கொண்டார். தான் இவ்வளவு காலமாக கஷ்டப்பட்டு கண்டறிந்த அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதா? என்று திகைத்துப் போனார். எனவே உண்மை நிலையை கண்டறியும் நோக்கோடு குறிப்பிட்ட இவ்வசனத்தின் மொழி பெயர்ப்பை சரி பார்த்தார்.
இந்த அறிவியல் பேரூண்மை மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த திருக்குர்ஆனில் புதைந்து கிடைப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஒரு நிமிடம் அசந்து போனார். இந்த இறை வசனம் அவருடைய உள்ளத்தில் தன் தாக் கத்தை பதிவுசெய்தது. தனது ஆதிக்கத்தை செலுத்தி விட்டது. இவரை இஸ்லாத்தின் பக்கம் கவரக் கூடிய வாசல்கள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டன.
சவூதியின் தலைநகர் ரியாதில் திருக் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அறிவியல் அத்தாட்சிகள் (Scientific Signs of Quran & Sunnah) எனும் தலைப்பில் நடை பெற்ற 8 ஆவது சவூதி மருத்துவ மாநாட்டில் பேரா சிரியர் கலந்து கொண்டார். எங்கேயோ ஒரு மூலையில் இருந்து அல்லாஹ் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இஸ்லாத் தை தனது தூய வடிவில் புரியவைத் தான். ஹிதாயத்தையும் அருட் கொடையாக வழங்கினான்.
மக்கள் கூட்டமாக நிறைந்திருந்த அந்த சபையில் எல்லோருடைய கண்களும் ஒரு மனிதரை நோக்கிய வண்ணமே காணப்பட்டன. மக்கள் இவருடைய நாவு எதைப் பேசப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள். மக்கள் மன்றத்தில் தைரியமாக 'தெஜாஸன்' இஸ்லாத்தின் ஏகத்துவக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டார்.
வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று அனைவர் முன்னிலை யிலும் பகிரங்கமாக கலிமாவை முழங்கினார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல் ஹம்துலில்லாஹ்!
கேள்விகள்: 01
வேதனை உணரும் நரம்புகள்
1 தோலிலுள்ள வலி உள்வாங்கிகள் குறித்து ஆய்வு நடத்திய பேராசிரியர் யார்?
2 சவூதியில் நடந்த எத்தனையாவது மருத்துவ மாநாட்டில் பேராசிரியர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?
Post a Comment