கப்றுகளை ஏன் வணங்கக் கூடாது..? ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 19)
ஷிர்க்கிற்கு இட்டுச் செல்லக் கூடிய எல்லா வழிகளையும் நபி (ஸல்) அவர்கள் அடைந்து விட்டு அவை பற்றி எச்சரிக்கை யும் செய்தார்கள். அப்படி அவர்கள் எச் சரிக்கை செய்த விடயங்களில் ஒன்றுதான் கப்று விடயமாகும். கப்றுகளிலேயே அடங் கப்பட்டோரை வணங்காமல் இருக்கவும் அவர்கள் விடயத்தில் எல்லை மீறாமல் இருக்கவும் சில முன் ஏற்பாடுகளையும் செய்தார்கள். அவை,
1) அவ்லிய்யாக்கள், நல்லடியார்கள் விடயத்தில் எல்லை மீறுவதை எச்சரித்தார்கள். ஏனெனில், அவர்கள் விடயத்தில் எல்லை மீறுவது அவர்களை வணங்குவதற்கு வழிவகுக்கும். எல்லை மீறுவதை நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். உங்களுக்கு முன்னர் இருந்தோர் அழிவதற்குக் கார ணம் அவர்கள் எல்லை மீறி நடந்ததேயாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா) நஸாராக்கள், மர்யமுடைய மகன் (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்தது போல் என்னை நீங்கள் அளவு கடந்து புகழாதீர் கள். மாறாக நான் அல்லாஹ்வுடைய ஒரு அடியான். எனவே, அல்லாஹ்வுடைய அடி யாரும் அவனுடைய தூதருமாகும் என்று நீங்கள் கூறுங்கள்|| என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) கப்றுகள் மீது கட்டிடங்கள் கட்டு வதை எச்சரித்தார்கள். அபுல் ஹய்யாஜ் அல் அஸதீ என்பவர் அறிவிக்கிறார்: அலி (ரழி) அவர்கள் என் னிடம் பின்வருமாறு சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள். ஷஷஎன்னை ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த அதே பணிக்காகவே உம்மை நான் அனுப்புகி றேன். எந்தச் சிலையையும் உடைக்காமல் விட்டு வைக்காதே! நிலத்தை விட்டும் உயர்த்தப்பட்ட எந்த கப்ரையும் சமப்படுத்தாமல் விடாதே! (ஆதாரம்: முஸ்லிம்) மேலும் கப்றுகளைப் பூசுவதையும் அதன் மீது கட்டிடங்கள் கட்டுவதையும் நபியவர்கள் தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கப்று களைப் பூசுவதையும் அதன் மீது உட்காரு வதையும் அதன் மீது கட்டிடங்கள் கட்டுவ தையும் தடுத்தார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) கப்ரடியில் தொழுவதை எச்சரித்தார் கள். ஷஷநபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கை யில் இருந்தபோது அவர்களது முகத்தில் போடப்பட்டிருந்த துணியை அகற்றுபவர்களாக இருந்தார்கள். நான் அதனை சரி செய்தால் அவர்கள் எடுத்து விடுவார்கள். இவ்வாறு இருக்கும்போதே அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்: யூத கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்று களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களது நபிமாரின் கப்றுகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டனர். நீங்களும் அவற்றை வணக் கஸ்தலங்களாக ஆக்காதீர்கள். அதனை விட்டும் உங்களை நான் தடுக்கிறேன்| என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
கப்றுகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொள்வது என்பது அர்த்தம் அவ் வற்றிடத்திலே தொழுவதாகும். அவற்றின் மீது பள்ளிகள் கட்டப்படாவிட்டாலும் சரியே.
எந்த இடத்தில் தொழ நாடினாலும் அவ்விடம் பள்ளியாகவே கருதப்படும். பூமி எனக்கு மஸ்ஜிதாகவும் சுத்தமாகவும் ஆக்கித் தரப்பட்டுள்ளது என நபியவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்: புகாரி) அவற்றின் மீது பள்ளிவாசல்கள் கட்டப்படுமானால் நிலமை படுமோசமானதாகும்.
இந்த எச்சரிக்கைகளைப் பெரும்பாலான மக்கள் அலட்சியம் செய்து தடுக்கப்பட்ட விடயங்களைச் செய்து ஷிர்க்கிலே வீழ்ந்து விட்டிருக்கின்றனர். கப்றுகள் மீது பள்ளிகளையும் ஸியாரத்துகளையும் மகாம் களையும் கட்டுகின்றனர். கப்றுகளை தரிசிப்பதற்குரிய இடங்களாக மாற்றி அவ்விடத் தில் அறுத்துப் பலியிடல், அதில் அடங்கப் பட்டவர்களிடம் பிரார்த்தித்தல், உதவி தேடல், அவர்களுக்காக நேர்ச்சை செய்தல் போன்ற பெரிய ஷிர்க்குகளைச் செய் கின்றனர்.
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறு கிறார்கள்: கப்றுகள் விடயத்தில் நபியவர் களும் அவர்களது தோர்களும் நடந்து கொண்ட விதத்தையும், இன்று மக்கள் நடந்து கொள்ளும் முறையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு நிலைகளுக்கு இடை யிலும்மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தி யாசத்தைக் கண்டு கொள்ளலாம். இரு நிலைகளும் ஒன்று சேரவே முடியாத அளவு இருக்கின்றது. நபியவர்கள் கப்ருகளை நோக்கித் தொழுவதைத் தடுத்தார்கள். இவர்கள் கப்றுகளை நோக்கித் தொழுகிறார்கள். அவற்றை வணக்கஸ்தளங்களாக ஆக்குவதைக் கண்டித்தார்கள். இவர்கள் அதன் மீது பள்ளிவாசல்களைக் கட்டி அல்லாஹ்வின் ஆலயங்களுக்கு ஒப்பாக்குகிறார்கள். அவற்றின் மீது விளக்கேற்றுவதை நபியவர்கள் எச்சரித்தார்கள். இவர்கள் அதனைச் செய்கிறார்கள். அவ்விடத்தில் விழாக்கள் எடுப்பதைத் தடுத்தார்கள். இவர் கள் விழாக்களுக்குரியதாகவும் யாத்திரைக் குரிய இடமாகவும் அதனை ஆக்குகிறார் கள். அன்றியும் பெருநாளைக்கு ஒன்று சேர்வதை விடவும் அதிகமாக அவ்விடத்தில் ஒன்று சேர்கிறார்கள்.
கப்றுகளை சமப்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்: என்னை பின்வருமாறு கூறி அலி (ரழி) அனுப்பி வைத் தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன பணிக் காக என்னை அனுப்பி வைத்தார்களோ அதே பணிக்காக உன்னை நான் அனுப்பி வைக்கிறேன். உருவப் படங்களைக் (சிலை) கண்டால் அவற்றை உடைக்க வேண்டும். பூமியை விட்டு உயர்த்தப்பட்ட கப்ருகளைக் கண்டால் அவற்றை சமப்படுத்த வேண்டும். இதுவே அந்தப் பணியாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் துமாம பின் ஷுபிய்யா கூறுகிறார்: புழாழா பின் உபைத் (ரழி) அவர் களுடன் ரோம் நாட்டில் ஓரிடத்தில் இருந்தோம். எங்களோடிருந்த ஒருவர் அங்கு மரணித்து விட்டார். அவருடைய கப்ரைப் பூமியை விட உயர்த்த வேண்டாமென புழாழா உத்தரவிட்டு இவ்வாறு நபியவர்கள் ஏவினார்கள் என்று கூறினார்கள்.
இவர்கள் மேற்படி இரண்டு ஹதீஸ் களுக்கும் கடுமையாக மாற்றம் செய்கிறார்கள். பூமியை விட்டும் வீடுகள் போன்று அவற்றை உயர்த்துகிறார்கள். அதன் மீது குப்பாக்களையும் கட்டுகிறார்கள். மேலும், இமாமவர்கள் கூறுகையில் நபியவர்கள் கப்று விடயத்தில் காட்டிய வழிமுறைக்கும் இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் வழிமுறை களுக்கும் இடையிலுள்ள பாரிய வேறுபாட் டைக் கவனித்துப் பாருங்கள். இதனால் கணிப்பிட முடியாத அளவு தீய விளைவுகள் ஏற்படுகின்ற என்பதை யாரும் மறுக்க முடி யாது. மறுமையை ஞாபகப்படுத்துவதற்காக வும் அங்கு அடங்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தித்துப் பிழைபொறுக்கத் தேடுவதற் காகவும் கப்றுகளை தரிசிக்குமாறு தூண்டினார்கள். அந்த நேரத்தில் தரிசிக்கக் கூடிய வன் தனக்கும் மணரித்தவருக்கும் நல்லது செய்தவனாகக் கருதப்படுவான்.
இந்த முஷ்ரிக்குகள் நிலைமையைத் தலைகீழாக மாற்றி விட்டனர். கப்றுகளை ஸியாரத் செய்வதன் நோக்கம் கப்ராளிகளை அல்லாஹ்வுக்கு நிகராக்குவதும் அவர்களிடத்தில் பிரார்த்திப்பது, தமது தேவைகளைக் கேட்பது, எதிரிகளை மிகைக்கக் கூடிய வாய்ப்பைத் தருமாறு வேண்டுவது போன்ற வையாக ஆக்கி விட்டனர். இதனால் தமக்கும் கப்ராளிகளுக்கும் கெட்டது செய் தவர்களாக ஆகின்றனர். (பார்க்க இகாஸ துல் லஹபான் 1÷214, 215, 217)
மேற்போந்த விடயங்களிலிருந்து கப்று (ஸியாரம்)களுக்கு அறுத்துப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது ஷஷிர்க் அக்பர்| என்னும் பெரிய இணையாகும் என்பது தெளிவாகின் றது. ஏனெனில் கப்ருகள் மீது கட்டிடங்கள் கட்டி, அவற்றை வணக்கஸ்தலங்களாக ஆக்கக் கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களது வழிமுறைக்கு முற்று முழுதாக மாறு செய் கின்றார்கள். அதேநேரம் அவற்றை ஸியா ராக்களாக ஆக்குகின்றபோது அறிவிலிகள், அதில் அடங்கப்பட்டோர் நல்லது செய் யவோ, தீங்கிளைக்கவோ சக்தி படைத்த வர்கள் என்றும், அவர்களிடத்தில் யாராவது உதவி தேடினால் உதவி செய்வர், தேவை களை நிறைவேற்றுவர் என்றும் நம்புகின்ற னர். இதன் வெளிப்பாடாகவே அவற்றுக்கு நேர்ச்சை செய்கின்றனர். அறுத்துப் பலியிடுகின்றனர். நிலைமை எந்தளவுக்கு முற்றி விட்டதென்றால் கப்றுகளை அல்லாஹ்சை விட்டு விட்டு வணங்கப்படுகின்ற சிலை களாக மாற்றி விட்டனர்.
யா அல்லாஹ்! எனது கப்ரை வணங் கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! என்று நபியவர்கள் பிரார்த்தித்தார்கள். (ஆதாரம்: மாலிக், அஹ்மத்)
இப்படி நபியவர்கள் பிரார்த்திக்கக் காரணம் இவ்வாறுசில கப்றுகள் ஆக்கப்படும் என்பதனாலேயாகும். பெரும்பாலான இஸ் லாமிய நாடுகளில் இதனை நாங்கள் காண் கின்றோம். ஆனால், நபி (ஸல்) அவர்களது கப்ரைப் பொறுத்தவரை அதனை அவர்க ளின் துஆவின் காரணமாக அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். இருந்தபோதிலும் கூட அங்கு சில மௌட்டீகக்காரர் களால் சில கூடாத காரியங்கள் நடக்கத் தான் செய்கின்றன. எனினும் அவர்கள் நபியவர்களின் கப்ரை அடைந்துகொள்ள முடியாது. ஏனெனில், அவர்களது கப்று இல்லத்திலேதான் இருக்கிறது. அது பள்ளி வாயலில் இல்லை. மேலும் அதனைச் சுற்றி வேலிகளும் கட்டப்பட்டுள்ளன. இதனையே இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் நூனிய்யா என்ற தனது கவிதைத் தொகுப் பில் பின்வருமாறு பாடுகிறார்:
ரப்புல் ஆலமீன் அவர்களது பிரார்த்த னையை அங்கீகரித்து மூன்று சுவர்களால் அதனைப் பாதுகாத்தான்.
கேள்விகள்19
கேள்வி – 1 யா அல்லாஹ் எனது கப்றை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே என்று எந்த நபியால் பிரார்தனை செய்யப்பட்டது?
கேள்வி – 2 கப்றுகளில் அறுத்து பலியிடுவது எந்த வகையான பாவத்தை சேர்ந்தது?
Post a Comment