நவம்பர் 19 ஆம் திகதியை உலக கழிவறை தினமாக கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு
உலக நாடுகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடு பிரதிநிதிகள் கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் தூதர் மார்க் நியோ பேசுகையில், உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தை பேணுவது இல்லை. 1.1 பில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகளை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது என்றார்.
இந்த கூட்டத்தில் நவம்பர் மாதம் 19ம் தேதியை உலக கழிவறை தினமாக அறிவிக்கலாம் என்று கருத்து தெரிவித்த போது சிரிப்பொலி எழுந்தது. அதன் பிறகு சபையில் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து 193 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். சிங்கப்பூரில் மக்கள் கழிவறைகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை போல் உலக நாடுகள் பின்பற்ற வேண்டும். ஐக்கிய நாடுகளின் துணை பொது செயலாளர் ஜென் எலிசன், சிங்கப்பூரை பாராட்டியுள்ளார். சுகாதாரத்தை பேணுவது நமது முக்கிய கடமை என்று நியோ மேலும் கூறினார்.
அய்யா ! உலக களுசரை தினம் எப்போது?
ReplyDeleteஎன்ன உலகம்டா இது ......
நாயனே .. நீதான் எம்மை இந்த கேடுகெட்ட சமூகத்திடமிருந்து பாதுகாக்க வேண்டும்.