பாடநெறிகளை பூர்த்தி செய்த 183 கிழக்கு மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பிறிட்டிஸ் கொலேஜ் அப்லே இஸ்டடிஸ் (டீவு டீஊயுளு ஊயுஆPருளு)பீகாஸ் கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் 2013 விருது வழங்கும் விழா 30-06-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு பீகாஸ் கல்லூரியின் பிரதம நிறைவேற்று முகாமையாளர் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதி ,கௌரவ அதிதி, தலைமையக பணிப்பாளர் உள்ளிட்டோரின் உரைகள் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு பீகாஸ் கல்லூரியின் வீடியோ காட்சி அறிமுகம் மற்றும் நாடகம் ,குழு நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேஸன் ,கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் கலாநிதி ஜே.கென்னடி, பிறிட்டிஸ் கொலேஜ் அப்லே இஸ்டடிஸ் பீகாஸ் கல்லூரியின் தலைமையக பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றஹ்மான் மற்றும் மட்டக்களப்பு பீகாஸ் கல்லூரியின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) உள்ளிட்ட அதிதிகள்,கல்வியியலாளர்கள்,புத்திஜீவிகள்,உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு 2013ம் ஆண்டு கெட்டன் பீ .எஸ். பாடநெறி ,ஆங்கில விஷேட பாடநெறி,வணிகத்துறை வியாபார பாடநெறி முதலிய பாடநெறிகளை பூர்த்தி செய்த 183 கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு பிரதம அதிதி மற்றும் அதிதிகளினால் சான்றிதழும்,பதக்கமும்; வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment