தொழுகையை நடத்த இடமளியுங்கள் - 18 முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
எச்சரிக்கையை அடுத்து, மகியங்கனையில் உள்ள பள்ளிவாசல் பல நாட்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளதால், ரமழான் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக் குழுவொன்றின் அச்சுறுத்தலை அடுத்து மகியங்கனை பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
இந்தப் பள்ளிவாசலைத் திறந்து மீண்டும் தொழுகையை நடத்த ஏற்பாடு செய்யும்படி, பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 18 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.
இது தொடர்பாக ஆராய இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் இப்படியெல்லாம் கெஞ்சி குளறுவீன்கள் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும்
ReplyDeleteஐவேளை தொழுகைக்கும் தடைவந்து பலநாட்கள் சென்றுவிட்டன இது தொடர்பில் பேச நல்ல நேரம் பார்த்திருக்கிறார்கள் நமது சண்டியர்கள் . அங்கே போவதற்க்கு பயம் ஏற்கனவே வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கியாச்சு , என்ன முகத்தோடு அங்கே போவது எல்லோரும் சேர்ந்து போனால் ஒரு மாதிரியாக தப்பிக்கலாம், அதுதான் கொஞ்சம் நாளாச்சு .
ReplyDeleteஇது எதிர்காலம் பற்றிய செய்தி!
ReplyDeleteஇப்படித்தான் டுமீல் அறிக்கைகளை இவர்கள் விடுவார்கள். பின்னர் முகவரியில்லாமல் கையொப்பம் வைக்கவும் பயந்து ஒளிந்து கொள்வார்கள்.
முதலில் இநதப் பதினெட்டு ஆத்மாக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சென்று தைரியமாகக் குரல் கொடுக்கட்டும். அப்புறம் மிச்ச முஸ்லிம் எம்.பி மார் மந்திரிமாரை நாம் தேடிப்பார்க்கனலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ஆத்திரப்படாமல் பொறுமையாக இருந்து அல்லாஹ்விடம் துஆச்செய்யுங்கள் அனீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் எதுவிதத்திரைகளும் கிடையாது அனைவரும் இக்காடையர்கூட்டங்களுக்கு உரிய கூலியை அல்லாஹ் வழங்குவான் கண்டிப்பாக் விட்டுவிடவேண்டாம் அதிகம் அதிகம் பிரார்த்தியுங்கள் நல்ல மாதம் நல்ல நாட்களில் நாம் ஒவ்வொரு வருடமும் இப்படி அனீதி இழைக்கப்படுகின்றோம் ஆனால் இறைவனை நாடி எத்தனைபேர் கையேந்தி நிற்கின்றோம் கண்டிப்பாக் அல்லாஹ் மிகவும் நீதியாளம் கருணையாளன்.
ReplyDeleteதயவு செய்து இது போன்ட்ற ஒரு இறக்கமுல்ல ஜனாதிபதிக்கு உங்கல் பொன்னான வாக்குகளைப்போட தவறாதீர்கள்....
ReplyDeleteMahinda family is very proud for destruction of LTTE, therefore they do everything what they like to other minorities because no one ask about it?
ReplyDelete