ஆயிஷா பள்ளியும், பல உம்ராக்களும் - ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 17)
இன்று மார்க்கத்தை மக்களுக்கு தெளிவாகச் சொல்ல உலமாக்கள் பயப்படுகிறார்கள். சிலர் மக்களின் செல்வாக்கு நமக்குக் கிடைக்காது என்ற பயம், இன்னும் சிலர் யாரும் எப்படியும் செய்து விட்டுப் போகட்டும், இன்னும் சிலருக்கு அதைப் பற்றிய சரியான மார்க்க அறிவு இல்லாதாகும்.
இப்படியான உண்மையை எடுத்துக் காட்டி, மக்களை நேர்வழிப்படுத்தாதவர்களை அல்லாஹ் இப்படி எச்சரிக்கிறான்: மக்களுக்கு நாம் வேதத்தில் தெளிவுவுபடுத்திய பின்னர் நாம் அருளிய சான்றுகளையும், நேர்வழியையும், மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பதற்கு தகுதியுடையவர்களும் சபிக்கிறார்கள்.|| (2:159)
மார்க்க விடயத்தில் தெளிவுகிடைத்த பின்னர், இதுதான் சரியான சட்டம் என்று தெரிந்த பின்னரும் சரியான சட்டத்தைக் கூறாமல் தனது இலாபத்திற்காக உண்மையை மறைத்து, மார்க்கத்தில் விளையாடுபவர்கள் இறை சாபத்திற்கு உரியவர்கள் என்பதை களத்தில் இருக்கும் உலமாக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
மேலும் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டு, பிரிந்து விட்டவர்களைப் போல ஆகிவிடாதீர்கள். அவர்களுக்குக் கடுமையான தண்டனை உள்ளது. (3:105) இப்படிய பல வசனங்களின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டியும் நாங்கள் அப்படித்தான் எங்களை மாற்ற முடியாது என்றால் மறுமையில் கணக்கு கொடுக்கும்போது மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
அந்த அடிப்படையில் ஹஜ் காலத்திலோ அல்லது உம்ராக்கள் செய்வதற்கு செல்லும்போது, குறிப்பாக ஒரு தடவையில் எத்தனை உம்ராக்கள் செய்ய வேண்டும்? என்பதை புரிந்து அந்த அமலை நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால், அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் (உலமாக்கள்) மக்களிடம் நீங்கள் எத்தனை உம்ராக்களும் செய்துகொள்ளலாம் என்று ரெடிமேட் பத்வாவை கொடுத்தவுடன், ஆயிஷா பள்ளியை மையப்படுத்தி மாறி மாறி இஹ்ராமை அணிந்த நிலையில் நான் ஹஜ் செய்யப் போனபோது நான் பத்து உம்ரா செய்தேன், நான் ஐந்து உம்ரா செய்தேன் என்று ஊரில் வந்து பெருமையாகப் பேசக் கூடிய துர்பாக்கியமான நிலையைக் காணலாம்.
ஒரே தடவையில் ஆயிஷா பள்ளியை எல்லையாக வைத்து யார் உங்களை இப்படிச் செய்யும் படி கூறினார்கள் என்றால் உங்களுக்கு வழிகாட்டியாக வந்த இன்னஇன்ன உலமாக்கள் என்று கூறக் கூடிய நிலையைக் காணலாம்.
பொதுவாக ஒவ்வொரு அமலுக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி ஒரு முன்மாதிரியாக உள்ளது. அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும்போது அல்லது உம்ரா செய்யும்போது எதை எல்லையாக அமைத்தார்கள்? எத்தனை எல்லைகளை அடையாளப்படுத்தினார்கள்? என்பதை நாம் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டவுள்ளோம்.
நபியவர்கள் காட்டிய எல்லைகளுள் உள்ள ஓர் எல்லைதான் துல் ஹுலைபாவாகும்.
துல்ஹுலைபா: இது மதீனாவாசிகளுக்கும் அதன் வழியே வருபவர்களுக்கும் இஹ்ராம் கட்டுவதற்கான எல்லை ஆகும். இது மக்காவிலிருந்து கிட்டத் தட்ட 420 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதுதான் எல்லைகளில் மிகவும் தூரமான எல்லையாகும். இதற்கு வாதி அல் அகீக் என்றும் சொல்லப்படும். அந்த இடத்தில் மஸ்ஜிதுஸ் ஸஜரா என்ற பெயரில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இது மதீனாவிலிருந்து கிட்டத் தட்ட பதிமூன்று கி.மீ. துஸரத்தில் அமைந்துள்ளது.
அல் ஜுஹ்பா: இது ஷாம் மற்றும் மிஸ்ர் மேற்கிலிருந்து வருபவர்களுக்கான எல்லiயாகும். இது மக்காவிலிருந்து கிட்டத்தட்ட 186 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
யலம்லம்: இது யமன்வாசிகளுக்கும் அதன் வழியே வருபவர்களுக்குமான எல்லையாகும். இது கிட்டத்தட்ட மக்காவிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு ஸஃதிய்யா என்றும் பெயர் சொல்லப்படும்.
கர்னல் மனாசில்: இது நஜ்த் மற்றும் தாயிப் வாசிகளுக்கும் மற்றும் அதனைச் சூழவுள்ள அல்லது அதன் வழியே வருபவர்களுக்குமான எல்லையாகும். இதற்கு அஸ்ஸைனுல் கபீர் என்றும் பெயர் சொல்லப்படும். இது மக்காவிலிருந்து கிட்டத்தட்ட 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
தாதுல் இர்க்: இது ஈராக் மற்றும் அதன் வழியே வரக் கூயவர்களுக்குமான எல்லையாகும். இது மக்காவிலிருற்து கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட எல்லைகளை பின்வரும் ஹதீஸ் நமக்கு இப்படிச் சொல்லித் தருகிறது.
மதீனாவாசிகளின் எல்லை துல் ஹுலைபாவிhகும். ஷாம் வாசிகளின் எல்லை ஜுஹ்பாவாகும். மேலும் நஜ்த்வாசிகளின் எல்லை கர்னல் மனாஸிலாகும். யெமன்வாசிகளின் எல்லை யலம்லமாகும் (முஸ்லிம்-புகாரி-1526)
இஹ்ராம் கட்டுவதற்கான எல்லைகளை நபி (ஸல்) அவர்கள் வஹி செய்தியின் மூலம் நமக்கு தெளிவாக சொல்லியிருக்கும்போது, அதற்கு மாற்றமாக ஆயிஷா பள்ளியும் ஓர் எல்லiயாக எப்படி வந்தது. பெரிய பெரிய அறிஞர்கள் சேர்ந்து முடிவெடுத்துள்ளதால், அதுவும் ஓர் எல்லைதான் என்று எப்படிக் கூற முடியும்?
முதலில் ஆயிஷா பள்ளி வரலாற்றைப் படியுங்கள். ஏனென்றால், ஆயிஷா பள்ளி வரலாறு சரியாகத் தெரியாததினால்தான் அதையும் நம்மவர்கள் ஓர் எல்லையாகப் பிரகடனப்படுத்தி விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்; செய்ய வந்தபோதுதான் திடீரென ஆயிஷா (ரழி) அவர்களுக்கு உதிரப் போக்கு (மாதவிடாய்) ஏற்பட்டு விட்டது. அது சுத்தமாகும் வரை ஓர் இடத்தில் தங்கினார்கள். அதன் பின் தனது சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபூ பக்ர் (ரழி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று குளித்து விட்டு இஹ்ராம் கட்டி வருமாறு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். (ஹதீஸின் சாரம், முஸ்லிம்-2298, புகாரி-1556)
ஹஜ் செய்ய வந்தபோது தனக்கு ஏற்பட்ட மாதவிடாய் சுத்தம் ஆகின்றவரை தங்கிய இடம்தான் இன்றைய எல்லையாக மாற்றப்பட்டிருக்கும் ஆயிஷா பள்ளியாகும். நபி (ஸல்) அவர்களுடன் ஏற்கனவே உம்ரா செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் அணிந்து வந்துள்ளார்கள். அதன் பின் அவர்கள் சுத்தமான பின் தனது சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்கு அனுப்பிதான் மீண்டும் இஹ்ராம் கட்டி ஹஜ்; கடமைகளை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே ஆயிஷா பள்ளி என்பது மாதவிடாய் வந்த பணெ;கள் தங்குமிடமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் குளிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லையாக அமைக்க முடியாது.
அதை ஏன் எல்லையாக மாற்றினார்கள் என்பதை கவனிக்கும்போது, ஹஜ் செய்யப் போகிறவர்கள், நாங்கள் பல இலட்சங்களை செலவழித்து வந்துள்ளோம். எனவே நாங்கள் பல உம்ராக்கள் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும்போது இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இப்படியான தந்திரங்ள் கையாளப்படுகிறது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய எல்லைக்குப் போய் இஹ்ராம் கட்டி வருவது காலம், நேரம், பணம் கூடுதலாக செலவாகும். அதனால் சமாளிப்பதற்கு மக்களுக்கு தவறான முறையில் வழிகாட்டப்படுகிறது.
மக்காவிற்குப் பக்கத்திலுள்ள எல்லையான கர்னல் மனாசில் கிட்டத்தட்ட 75 கி.மீ. என்றால் மக்காவிலிருந்து போய் வர 150 கி.மீ. எனவே இது கஸ்டம் என்று இஸ்லாம் காட்டித் தராத வழிகளைக் கiயாள்வதைக் காணலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும்போது ஒரு உம்ராதான் செய்தார்கள். அது ஸஹாபாக்களும் ஒவ்வொரு தடவையும் ஒரு உம்ராதான் செய்தார்கள். இப்படி இருக்கும்போது வழிகாட்டிகள் ஏன் மக்களை தவறாக வழிநடத்த வேண்டும். வழிகாட்டிகளால் பணத்திற்காக ஹஜ், உம்ரா நிறைவேற்றப்படுகிறது. எனவே சிந்தியுங்கள். சரியானதை நடைமுறைப்படுத்துங்கள்.
கேள்விகள் 17
கேள்வி – 1 துல் ஹுலைபா என்ற எல்லை மக்காவிலிருந்து எத்தனை கீலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ளது ?
கேள்வி – 2 ஆயிஷா (ரலி) அவர்கள் யாருடன் தன்யீம் என்ற இடத்திற்கு சென்றார்கள்?
jazakallah admin....I have the same doubt when i am doing the umrah about four months ago, so i refuse to do umrah from AYESHA MOSQUE..am thakful to you Mr.admin,to give good message to people.
ReplyDelete