தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 150 பட்டதாரிகள் சிறுவர் நியமனம்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பயற்சியளிக்கப்பட்ட 150 பட்டதாரிகள் சிறுவர் உளசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 29)-07-2013 நியமனம் பெறுகின்றனர்.
இவர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் 2 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்குகக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதில் அதிகார சபை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டம் தோரும் இரு உளசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததனால் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை சரியான முறையில் கையாளுவதில் பல சிக்கல் தோன்றின.
ஒவ்வொரு மாதமும் 3000க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும் அவற்றை விசாரிப்பதற்காக 50 கள நிலை உத்தியோகத்தர்களே அதிகார சபையில் இருந்து வந்துள்ளனர். இவற்றைக் கருத்திற்கொண்டு மேலதிக ஆளணியினரைச் பிரதேச செயலமட்டத்தில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு 150 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 வாரம் பயிற்சியளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவரவர் பிரதேச செயலகங்களில் சிறுவர் உளசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம்பெறும் 150 பட்டதாரிகளில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஏறக்குறைய 60 தமிழ் மொழி மூல பட்டதாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment