Header Ads



முஸ்லிம்களுக்கு சொந்தமான 150 ஏக்கர் காணி கடற்படையின் வசம் (படங்கள்)


(முசலியான்)

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஊட்பட்ட மரிச்சிக்கட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில்  அமையந்துள்ள முஸ்லிம் மக்கஞக்கு சொந்தமான மையவாடி.விட்டுக்காணி மற்றும் வயல் நிலங்கள்  1990 முன்பு பயன்படுத்தப்பட்ட புர்விக நிலங்கள் தற்போது கடற்படையின் கைவசம் உள்ளதாக அப்பிரதேசத்தினை பரம்பறையாக வாழ்ந்த முஸ்லிம்கள் கவலை அடைகின்றனர்.

1990 ஆம் ஆண்டு காலபகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத யுத்ததினால் வடமாகாண முஸ்லிம் தங்களின் தாய புமியினை விட்டு விட்டு உயிரினை கய்யில் பிடித்து கொண்டு ஓடத்தொடங்கினார்கள்.பல வருடகாலமாக அகதி என்ற பச்சை குத்தப்பட்ட நாமத்துடன் சுமார் 23 வருடம் புத்தளம்.அனுராதபுரம் போன்ற பல பிரதேங்களில் வாழ்ந்து விட்டு தற்போது தாய புமியில்யில் மீளகுடியேறும் போது காணி இல்லாத பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆயுத முனையில் வெளியேற்றபட்ட போது குறிப்பிடபட்ட தொகையாக இருந்த குடும்பங்கள் தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளன.அனைத்து குடும்பங்களையும் குடியேற்ற வேண்டும் என்றால் பல ஏக்கர் காணி தேவைப்படுகினறன என்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.