13 க்கு எதிராக கண்டியில் போராட்டம்..!
(ஜே.எம்.ஹாபீஸ்)
அரசியல் அமைப்பின் 13 வது திருத்தத்தை முற்றாக அகற்றும்படி கோரிக்கை விடுத்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் முன் பௌத்த அமைப்புக்கள் பல இணைந்து அமைதிப் பிராத்தனை (அதிஷ்டான பூஜா) ஒன்றை நடாத்தின.
இன்று 2013 07 29 மாலை ஐந்து மணி அளவில் இடம் பெற்ற இந்த பூஜையில் பெருமளவு பொது மக்களும் பௌத்த மத குருமாரும் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் இது பற்றி தெரிவிக்கையில் அரசியல் அமைப்பின் 13 வது திருத்தம் எவ்வகையிலும் இக்காலத்திற்கு பொருந்தாத ஒன்று. எனவே அதனை முற்றாக ஒழிக்கும் படி வேண்டுகின்றோம். அதற்கு முன்னோடியாக பௌத்த சமயத்தின்படி இப் பூஜையை நடத்திவுள்ளோம் என்றனர்.
பூஜையில் கலந்து கொண்டோர் கண்டி பௌத்த மந்திரயில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைதியாக பிரிந்து சென்றனர்.
தேரைக்கு தேரையின் வாயினாலேதான் அழிவாம்.
ReplyDeleteஇந்த தேரர்களின் அழிவுகாலம் நெருங்கி விட்டது.
நல்ல பொழப்புடா இது பயங்கரவாதிகளுக்கும் திருடர்களுக்கும் குடிகாரன் கடத்தல்காரன் என்று பலரும் தற்போது பெளத்த தேரர்களாக இருக்கின்றார்கள், இதனால் உண்மையாக நல்லெண்ணங்களுடன் புத்தரின் கொள்கைபரப்பாளார்களான தேரர்களுக்குக்கூட இனிவரும் காலங்களில் மதிப்பில்லாமல் போய்விடும் போலிருக்கின்றது. இனிமேலாவது கண்விழித்து இக்காடையர்களுக்கு சரியான பாடம் புக்கட்டுவீர்களா.
ReplyDelete