Header Ads



கொழும்பில் குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்களுக்கு 13500 வீடுகள்

(அஸ்ரப். ஏ. சமத்)

கொழும்பில் குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்களுக்கு 18 தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இத் திட்டத்தில் மேலும் ஒரு தொடர் மாடி வீடமைப்பு; திட்டம் ஊருகொடவத்தையில் 1500 தொடர் மாடி வீடுகள் திட்டத்திற்கு இன்று (10) பாதுகாப்பபு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவினால் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத் திட்டத்திற்காக 400 மில்லியன் ருபா செலவில்  இவ் வீடமைப்புத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படுகினறது. இவ் வீடமைப்புத்திட்டம் களனி வாவி ஊடாக செல்லும் புதிய பிரதான பாதை அருகில் நிர்மாணிக்கப்படுகினறது. இதற்காக இப் பிரதேசத்தில் வாழும் 650 குடும்பங்களுக்கு இவ் வீடுகள் வழங்கப்படும்.

கொழும்பில் குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்கள் மற்றும் சட்டவிரோத வீடுகள் முடுக்கு வீடுகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் சட்டவிரோத கட்டங்களை அகற்றும்போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு இவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும். என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இவ் வீடமைப்புத்திட்டம்  நகர அபிவிருத்தி அதிகார சபையின்  18வது தொடர் மாடி வீடமைப்புத்திட்டமாகும்.  2011ம் ஆண்டில் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 17 திட்டங்களில் 12,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவைகள் பின்வரும் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு அலுத் மாவத்தை, கேனமுல்லை, சிரில் சிறி பெரேரா மாவத்தை, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை,  யுவல் ஆர்ட் வீதி, வேஸ்லைன் வீதி, கடவத்தை, தெமட்டக்கொட, சி.பி. ஆர் வத்தை, மாளிகாவத்தை,  சாலமுல்லை,  மயுர பிரதேசம் போன்றவையாகும். 

இதனை விட மாளிகாவத்தையில் பிரதிபா மாவத்தையும், அப்பிள் வத்தை வீடமைப்புத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகரப் பிரதேசம் மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் சட்ட விரோத வீடுகளிலும்  2 பேர்ச் காணிகளில் வாழும் குடும்பங்களுக்கு இவ் வீடமைப்புத்திட்டம் பகிர்ந்தளிக்கப்படும். 

No comments

Powered by Blogger.